கலைத்துறைக்கு ஓகே !

கொரோனா தாக்கம் உலகையே உலுக்கி  கொண்டிருக்கிறது. பல தொழில்களும் முடங்கியுள்ளது. இதன்  காரணமாக சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் மாத இறுதியில் வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டன. அன்று தொடங்கி வெளிநாடு மற்றும் உள்நாட்டில் நடைபெற்று வந்த வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் மற்றும் அந்த படங்கள் சார்ந்த Post Production எனப்படும் தயாரிப்புக்கு பிந்தைய வேலைகள் அனைத்துக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டது. 

இதனால் பிற தொழில்களை போல சினிமா துறையும் பெரிய அளவில் பாதிப்படைந்தது, இந்நிலையில் அண்மையில் தமிழகத்தில் சிறு குறு தொழில்கள் தொடங்க சில தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில் குறைவான அளவில் ஆட்களை கொண்டு post production பணிகளை தொடங்க அனுமதிக்குமாறு தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

நேற்று இந்த மனுவை ஏற்ற தமிழக அரசு post production வேலைகளுக்கு நிபந்தனையோடு கூடிய அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி படத்தொகுப்பு (Editing – அதிகபட்சம் 5 நபர்கள்), குரல் பதிவு (Dubbing – அதிகபட்சம் 5 நபர்கள்), கம்ப்யூட்டர் மற்றும் VFX (10 முதல் 15 பேர்), DI எனப்படும் நிற கிரேடிங் (அதிகபட்சம் 5 நபர்கள்), பின்னணி இசை (அதிகபட்சம் 5 நபர்கள்) மற்றும் ஒலிக்கலவை (அதிகபட்சம் 5 நபர்கள்) ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனுமதி குறித்து பல இயக்குனர்களும்,தயாரிப்பாளர்களையம் தமிழக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.  தற்போது இதன் அதிகார பூர்வமான அறிவிப்பை எர் ரஹ்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

சினிமா பற்றிய தகவல்களை உடக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் படத்துடன் இணைந்திருங்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *