சிந்துபாத் ட்ரைலர் ஒரு பார்வை

எஸ் யூ அருண்குமார் இயக்கத்தில் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் மூன்றாவது படமாக வர இருக்கின்ற படம்தான் சிந்துபாத். விஜய் சேதுபதியை தொடர்ந்து சூரியா, அஞ்சலி, விவேக் பிரசன்னா நடித்திருக்கின்ற இந்த படத்தினுடைய ட்ரைலர் நேற்று வெளியானது.

வெளிவந்திருந்த ட்ரைலர்ரை பார்க்கும்போது action திரில்லர் கொண்ட ஒரு ஆழமான கதையை இருக்கும் என்று சொல்லமுடிகிறது. சிந்துபாத் ட்ரைலர் ஆரம்பத்தின் ஒரு சில காட்சிகளிலேயே விஜய் சேதுபதி மற்றும் சூர்யா ரெண்டு பெரும் பிட் பாக்கெட் அடிக்கின்றார்கள்.

இந்த காட்சியை வைத்தே சொல்லிவிடலாம் இவர்கள் இரண்டு பேரும் திருடிதான் வாழ்க்கையை பயணிக்கிறார்கள் என்று. முக்கியமா நிறைய காட்சிகளில் அஞ்சலி கத்தி பேசுகின்றார். குறிப்பாக ஒரு காட்சியில் “என்னால இப்படித்தா பேசமுடியும் என்று சொல்கின்றார் அதுக்கு அப்படிதான் பேசியாகனும் அதன் ரூல்ஸ்ன்னு சொல்கின்றார் மக்கள் செல்வன்.

இதெல்லாம் வச்சி பார்க்கும் போது விஜய் சேதுபதிக்கு காது கேட்காது மாதிரி இருக்கு. இப்படி மோதல் ஆரம்பிக்கின்ற இவங்களுடைய வாழ்க்கை கடைசியில் கல்யாணத்தில் முடிவது போல் உள்ளது. இதை உறுதி செய்யும் விதம் ட்ரைலர் இறுதியில் கல்யாணம் ஆகி ஒரு நாள் கூட வாழவில்லை என்று சொல்கின்றார் அஞ்சலி.

இந்த காட்சியை வைத்து சொல்லமுடியும் விஜய் சேதுபதி அவர்கள் தன்னுடைய மனைவியை மீட்க போகின்றார் என்பதும் இன்னொரு பக்கம் லிங்க் ஓட பேயரை கேட்டா தாய்லாந்துல ஒருத்தன் வாய்ய திறக்கமாட்டான் என்றும், ஒரு சைக்கோ வில்லனாக இருக்கின்ற லிங்க் தான் பெண்ணுகளை கடத்துவது, கொல்வது என்று எல்லா அசம்பாவித செயல்களை செய்வது போல் இருக்கின்றது. முக்கியமாக ட்ரைலர்லில் ஒரு கட்டத்துக்கு மேல் ஒரே உடையில் நம்ம மக்கள் செல்வன் இருக்கின்றார்.

இதிலே சொல்லிவிடலாம் இங்கேயிருந்துதான் தன்னுடைய மனைவியை தேட ஆரம்பிக்கிறார் என்பது போல் இருக்கின்றது. விஜய் சேதுபதி கூட அவர் மகன் என்னமாதிரியான கதாபாத்திரத்தில் வருகின்றார் என்று ட்ரைலர்லில் தெரிந்துகொள்ள முடியவில்லை ,இருந்தாலும் ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த கதாபாத்திரத்தில் இருப்பார் என்று யூக்கிக்க முடிகின்றது.

இதுமட்டுமில்லாமல் ட்ரைலர் முடிவில் நம்ம சூப்பர் கதை என்னானு ஒருத்தர் கேட்கின்றார் நம் விஜய் சேதுபதிடம் ,ஒரு வேல சூப்பர் என்கின்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்திருக்கலாம் என்று தோன்ற வைக்கின்றது.

மொத்தத்தில் வில்லன்கள் கடத்திட்டு கொண்டு போன தன் மனைவியை விஜய் சேதுபதி காப்பற்ற என்னமாதிராயன கஷ்டங்கள் படுகின்றார் என்பதுதான் சிந்துபாத் படத்தின் கதையாக இருக்கும் என்று நினைக்க வைக்கின்றது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here