சுஜித் மரணத்திற்கு ரஜினி இரங்கல்

ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 வயது சிறுவன் சுஜித் மரணம் அடைந்த சம்பவத்திற்கு நடிகர் ரஜினி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று பதிவு செய்துள்ளார். மேலும், இது குறித்து லதா ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டியில்🎙, “சுஜித்தின் நிலை குறித்து ரஜினிகாந்த என்னிடம் கேட்டவாறே இருந்தார், சுஜித் மீண்டு வரவேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருந்தது. சுஜித் மரணம் என்பது தேவையில்லாத உயிரிழப்பு. நடக்கக் கூடாது என அனைவரும் நினைத்து இருந்தோம். அது நடந்து விட்டது. குழந்தைகளுக்கு பெற்றோர் தான் பாதுகாப்பு, அவர்கள் நம்மை நம்பி தான் உள்ளனர். பாதுகாப்பின்றி குழந்தைகள் விளையாட பெற்றோர் அனுமதிக்ககூடாது. குழந்தைகளுக்காக மட்டுமே முழுநேரம் செயல்படும் குழுவை அமைக்கவுள்ளோம். குழந்தைகள் நலத்திற்காக பணியாற்ற அனைவரும் வாருங்கள்” என்று கூறியுள்ளார்.

Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here