தளபதி 63 படத்தில் வில்லனாக ஷாருக்கான்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக பெயரிடப்படாத தளபதி 63 படத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றார். இந்த படத்தில் நடிகர் விஜயுடன் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, விவேக், யோகிபாபு, கதிர், டானியல் பாலாஜி, இந்துஜா என்று இன்னும் பல முன்னணி நடிகர்கள் நடித்து வரும் இந்த படத்தில் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இணைந்துள்ளார்.

தளபதி 63யில் ஒரு சிறிய ரோலில் நடிக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது. முக்கியமாக படத்தில் கடைசி 15 நிமிடத்தில் ஷாருக்கான் வருவார் என்று சொன்னதுமட்டுமில்லாமல் வில்லனாக வருகின்றார் என்ற தகவலலும் வெளியாகியுள்ளது.

குறிப்பாக சமீபத்தில்தான் இயக்குனர் அட்லீ மற்றும் ஷாருக் இருவரும் ஒன்றாக அமர்ந்து ஐபிஎல் போட்டி பார்த்தனர் அதை வைத்து தளபதி 63யில் ஷாருகான் நடிக்க இருக்கின்றார் போன்ற விஷயங்கள் கசிந்தன.

இந்த தகவல் இப்போது உறுதியாகியுள்ளது. மேலும் இரண்டு சினிமா துறையில் முன்னணி ஹீரோக்களாக வளம் வருபவர்கள் இப்படி ஹீரோ-வில்லனாக நடிப்பது சற்றும் எதிர்பார்க்காத ஒன்று என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைAuto Shankar Movie Stills
அடுத்த கட்டுரைசிவகார்த்திகேயன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் ஓட்டுபோட்டதால் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here