நட்பே துணை ஒரு பார்வை

அவ்னி மூவீஸ் சார்பில் சுந்தர் சி , குஷ்பூ சுந்தர் சி தயாரிப்பில் D. பார்த்திபன் தேசிங் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா, கரு பழனியப்பன், அனகா, ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் நட்பே துணை.

படத்தின் கதைக்களம் :
உலகளாவிய நாடுகளில் ஒதுக்கப்பட்ட மருந்து நிறுவனத்துக்கு காரைக்கால் மாவட்டத்தில் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் கரு பழனியப்பன் சம்மந்தம் தெரிவிக்கிறார். அந்த நிறுவனம் காரைக்காலில் உள்ள ஒரு ஹாக்கி கிரவுண்டில் வருகிறது. இதனால் அந்த கிரவுண்டில் விளையாடும் ஹாக்கி அணி எவ்வளவு போராடியும் அந்த கிரவுண்ட்டை மீட்டெடுக்க முடியாத நிலையில் தள்ளப்படுகிறார்கள் இருந்தாலும் இதை மீறியும் தேசிய அளவில் அந்த ஹாக்கி அணி கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் திறமையை காட்டி கிரவுண்ட் தங்கள் கைக்கு வரவேண்டும் என்று களத்தில் இறங்குகின்றனர். இதற்கு பிறகு நடக்கும் அட்டகாசமான விளையாட்டே இந்த நட்பே துணை.

இயக்கம் : D. பார்த்திபன் தேசிங்
புதுமுகமாக தமிழ் திரைத்துறையில் அறிமுகமாயிருக்கும் இயக்குனர் D. பார்த்திபன் தேசிங் இயக்கம் படத்திற்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து புதுமையான கருத்துள்ள கதைகளுடன் வர வாழ்த்துக்கள்.

ஹிப்ஹாப் தமிழா:
மீசை முறுக்கு தொடர்ந்து அடுத்து ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்தான் நட்பே துணை. இந்த படத்தில் நடிப்பு, நடனம், இசை,அச்டின் என்று எல்லாவற்றிலும் வளர்ச்சியும் அதோடு தனக்கு என்னவெல்லாம் தெரியுமே அதை சரியாக செய்திருக்கிறார். நட்பே துணை என்ற படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு நிறைய யூ டுபெர்ஸ் வாய்ப்பை அள்ளி தள்ளியுள்ளார்.

கரு பழனியப்பன்:
விளையாட்டு துறை அமைச்சராக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் அரசியல்வாதிகள் அரசியலில் செய்யும் தந்திரத்தை அப்பட்டமாக தன் கதாபத்திரம் மூலம் எல்லாரையும் வாய் பிளக்கும் அளவுக்கு வெளிக்கொணர்ந்துள்ளார். குறிப்பாக அமைதிப்படையில் சத்யராஜியின் நாகராஜா சோழன் MA ML கதாபாத்திரத்துக்கு பிறகு இவரின் இந்த அரசியல்வாதி கதாபாத்திரம் பேசப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. நட்பே துணை படம் மூலம் இயக்குனர் கரு பழனியப்பன் அவர்களுக்கு இனி தொடர்ந்து வித்தியசமான கதாபாத்திரம் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஹரிஷ் உத்தமன்:
சண்முகம் என்ற பெயரில் ஹாக்கி பயிற்சியாளரக வருகிறார். படம் முழுவதும் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி குறை இல்லாத அளவிற்கு நடித்துள்ளார். இவரை தொடர்ந்து கதையின் நாயகியாக அனகா, கௌசல்யா, பாண்டியராஜன், குட்டி அரவிந்த், பிஜிலி ரமேஷ்,எரும சாணி விஜய், சாரா, vj விக்னேஷ் என்று மற்றும் பல யூ டுபெர்ஸ் அவர்களுடைய நடிப்பை ஸ்கோர் செய்துள்ளனர்.

இசை :
ஹிப்ஹாப் ஆதி இந்த படத்தில் நடித்ததுமட்டுமில்லாமல் இந்த படத்துக்கு இசையும் இசைமைத்துள்ளார். பாடல்களை விட பின்னணி இசையில் கவனம் செய்திருப்பது சிறப்பு.

ஒளிப்பதிவு :

டிமாண்டி காலனி, ஆறது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள் என்று மக்களால் பெரிதும் பேசப்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்க் இந்த படத்திற்க்கு ஒரு பிசுறு இல்லாமல் அழகான காட்சிகளால் மக்களுக்கு நிறைவு செய்துள்ளார்.
எடிட்டிங் :

பென்னி ஆலிவர் படத்தொகுப்பை கச்சிதமாக அமைந்துள்ளார். விளையாட்டும் அரசியலும் கலந்த படத்திற்கு தேவையான காட்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து கொடுத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதை
2. ஆதி மற்றும் கரு பழனியப்பனின் நடிப்பு
3. படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு
4. சமூக கருத்து

தம்ப்ஸ் டவுன் :

1. முதல் பாகத்தின் வேகத்தை மட்டும் கொஞ்சம் கூட்டியிருக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *