பணத்தலாம் விடமுடியாது !!

கொரோனா பாதிப்பால் உலகமே முடங்கியுள்ளது,  இந்தியாவிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  இந்நிலையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தொடங்கும் ஊரடங்கு உத்தரவால் திரையுலகம் செயல்பட முடியாமல் ஸ்தம்பித்து போயுள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தை குறைத்து கொள்ளவேண்டும் என்கிற கோரிக்கை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தெலுங்கிலும் எழுந்துள்ளது. இதில் முன்னணி நடிகையாக உயர்ந்து வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது அல்லு அர்ஜுன் ஜோடியாக நடிக்கும் புஷ்பா படத்திற்காக சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான சம்பளம் பேசியுள்ளார்.

இருந்தபோதும் இவரது தற்போதைய கவலை என்னவென்றால் இந்தப்படத்திற்காக பேசப்பட்ட சம்பளத்தில் 25% கசதவீதம் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாம். அதுமட்டுமல்ல இந்த ஐம்பது நாட்களில் தனது கால்ஷீட் வீணாகியதும் ராஷ்மிகாவை வருத்தப்பட வைத்துள்ளதாம். இதனால் ஊரடங்கு முடிந்து நிலைமை சீரானபின் தான் நடிக்க ஒப்புக்கொள்ளும் படங்களில் சம்பளத்தை கணிசமாக உயர்த்த முடிவு செய்துள்ளாராம் ராஷ்மிகா. அதனால் தன்னை போனில் தொடர்புகொள்ளும் தயாரிப்பாளர்களிடம் ஊரடங்கு முடிந்தபின் சம்பளம் பற்றி பேசிக்கொள்ளலாம் என கறாராக  கூறிவிடுகிறாராம். மேலும் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஆண்டனி அடுத்து நடிக்கவிருக்கும் படங்களில் 25% சம்பளத்தை குறைத்து கொள்ள முடிவு செய்துள்ளாராம்.  இதனால் தயாரிப்பாளர்களுக்கு கால் கோடி வரை பணம் மீதமாகும் என்பது குறிப்பிடதக்கது !!

சினிமா பற்றிய தகவல்களை உடக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் படத்துடன் இணைந்திருங்கள் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *