ரமலானில் வெளியாகிறது பொன்மகள் வந்தால் !!

பல சர்ச்சைகளை கடந்து பொன்மகள் வந்தால் திரைப்படம் ரமலான் நாளில் அமேசான் பிரைமில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது. ராட்ச்சசி, ஜாக்பாட் போன்ற திரைப்படங்களில் கடைசியாக திரையில் காணப்பட்ட நடிகை ஜோதிகா, இந்த ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி அன்று ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியீடு செய்யவிருந்தார். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக பூட்டப்பட்டதால் அனைத்து திரைப்படங்களைப் போலவே இப்படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டது. இருப்பினும், ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை தயாரித்த சூரியாவின் 2டி என்டர்டெயின்மென்ட் இந்த படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் பிரைமுக்கு ஒரு நல்ல விலைக்கு விற்றுள்ளது என்றும், இப்படம் தியேட்டர்களை தவிர்த்து, நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் என்றும் தெரியவந்தது.

முன்னதாக, ‘பொன்மகள் வந்தாள்’ மே மாதம் முதல் வாரத்தில் அதன் டிஜிட்டலில் பிரீமியர் செய்யப்படும் எனக் கூறப்பட்டாலும், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஜே.ஜே. பிரெட்ரிக், இந்த படம் மே 25 அன்று ரம்ஜான் பண்டிகைக்கு முன்னதாக டிஜிட்டல் பிரீமியர் செய்ய திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதையடுத்து, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் அதன் 9-வது திரைப்படமாகத் தயாரித்துள்ள இப்படத்துக்கு, ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் கோவிந்த் வசந்தா இப்படத்துக்கு இசையமைக்கிறார். மேலும், இந்த ப்படத்தில் ஜோதிகாவுடன் இயக்குநர் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் பொத்தன், தியாகராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சினிமா பற்றிய தகவல்களை உடக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் படத்துடன் இணைந்திருங்கள்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here