விசாக் எரிவாயு கசிவு: கொடூரமான சம்பவத்திற்கு பிரபலங்கள்ளின் அனுதாபங்கள்

பிரபஞ்சமே கொஞ்சம் எங்கள் மீது அன்பாக இரு !! உருக்கத்துடன் விவேக். ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பன்னாட்டு ரசாயன ஆலையிலிருந்து நச்சு வாயு கசிந்ததில் ஒரு குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர் என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. விசாகப்பட்டினத்தின் ஆர்.ஆர் வெங்கடபுரம் கிராமத்திலுள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ரசாயன எரிவாயு ஆலைக்கு அருகில் வசிப்பவர்கள் கண் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட, 200க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தினால் சுமார் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். பிரபலங்கள் பலரும் இந்த சோக நிகழ்வுக்கு தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் விவேக் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த எரிவாயு கசிவு விபத்து துக்ககரமானது. பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக மீண்டு வர பிரார்த்தனை செய்கிறேன், மேலும் பிரபஞ்சமே கொஞ்சம் எங்கள் மீது அன்பாக இரு”, என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் பிரமாண்ட இயக்குனர் SS  ராஜமௌலியும் தன்னுடைய டிவீட்டர் பக்கத்தில் அனுதாபத்தை பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியவை “அந்த பகுதியில் நடத்த நிகழ்வு குறித்த வெளியான காணொளியை கண்டு மனம் கலங்கி போனதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மக்களுக்காக பிராத்தனை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்””

மேலும் நடிகர்கள் ராம் சரண், அல்லுஅர்ஜூன், சிரஞ்சீவி, நாணி, ஜூனியர் NTR உள்ளிட்டோர் தங்களுடைய வருத்தங்களை பதிவிட்டுள்ளார் !!

சினிமா பற்றிய தகவல்களை உடக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் படத்துடன் இணைந்திருங்கள்!!

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here