விஜய் சேதுபதி கைது செய்யபடுவாரா?

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் தற்போது வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்ற படம்தான் சூப்பர் டீலக்ஸ். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தவிர பஹத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் என்றும் பலரும் நடித்திருக்கிறார்கள்.

முக்கியமாக இந்த படத்தில் ஆபாச காட்சிகள் இருக்கிறது என்று பல விமர்சனகள் எழுந்தாலும், விஜய் சேதுபதியின் நடிப்பை பலரும் பாராட்டி கொண்டு வருகிறார்கள். இதை தொடர்ந்து பல நடிகர், நடிகைகள் இந்த படத்தை பாராட்டு தெரிவித்து வருகின்றார்கள்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருந்தார்கள். குறிப்பாக இப்படத்தில் உள்ள ஒரு காட்சியில் இரண்டு குழந்தைகளை கடத்தி விற்றதாவும், விற்ற அந்த குழந்தைகளை வாங்கியவர்கள் கை, கால்களை முறித்து பிச்சை எடுக்க பயன்படுத்தியதாவும் விஜய் சேதுபதி பேசுகின்ற வசனம் உள்ளது.

இதற்கு திருநங்கைகளான ரேவதி, பிரேமா, கல்கி சுப்பிரமணியம் உள்ளிட்ட சில பேர் விஜய் சேதுபதியை கண்டித்து அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சமூக வலைத்தளத்தில் விடியோவை பதிவிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி மீது மாபெரும் மரியாதை வைத்திருந்தோம்.

அதை அவரே கொடுத்துக்கொண்டார் எனவும் மொத்தத்தில் திருநங்கை சமூகத்துக்கு இந்த படம் அநீதி இழைத்ததாவும் தெரிவித்துள்ளனர்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைமுள்ளும் மலரும் இயக்குனர் மஹேந்திரன் இன்று காலமானார்.
அடுத்த கட்டுரைநட்பே துணை ஒரு பார்வை

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here