விமல் – ஆஷ்னா சவேரி நடிக்கும் கிளாமர் படம்

சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “

விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். மற்றும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார். முதல் முறையாக ஆங்கில நடிகை “ மியா ராய் “ கன்பைட் காஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்களும் , சென்னை, தென்காசி, குற்றாலம் பகுதிகளில் 30 நாட்களும் நடைபெற்றது.

ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்

இசை – நடராஜன் சங்கரன்

பாடல்கள் – விவேகா

கலை – வைரபாலன்

நடனம் – கந்தாஸ்

ஸ்டண்ட் – ரமேஷ்.

எடிட்டிங் – தினேஷ்

தயாரிப்பு மேற்பார்வை – சுப்ரமணி

தயாரிப்பு நிர்வாகம் – பி.ஆர்.ஜெயராமன்

தயாரிப்பு – சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண்

திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் AR.முகேஷ்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here