வெளிநாட்டில் இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரம்பம்

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் 1996 யில் வெளிவந்து வெற்றி படமாக அமைந்ததுதான் இந்தியன். இந்த படத்தின் வசூலை இந்த காலகட்டத்தில் ஒப்பிட்டால் கோடி கணக்கில் வசூலித்த படத்தின் வரிசையில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கும் என்றே சொல்ல வேண்டும். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிருந்த இந்த படத்தின் பாகம் 2 இந்த வருஷம் ஜனவரியில் ஆரம்பித்தது. இதனால் மக்கள் மற்றும் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்த நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு சில பல காரணத்தால் நடைபெறாமல் இருந்தது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கமல் ஹாசன் அவர்களுக்கு போடப்பட்டிருந்த மேக் அப் சரியில்லாததால் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்திவைக்கபட்டதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், இந்தியன் 2 படம் வெளிவருமா என்ற எண்ணம் அனைவரிடம் எழுந்தது. இதற்கிடையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு போன மாதம் மீண்டும் ஆரம்பித்தது. லைக்கா நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகின்ற இந்த படத்தை ஷங்கர் இயக்குகின்றார். முக்கியமாக கமல் அவர்களுடன் இந்த படத்தில் பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ராகுல் சித்தார்த், ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு என்று பலர் நடித்து வருகின்றனர்.

கமல் அவர்கள் தனியார் தொலைக்காட்சியில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழிச்சியை நடத்தி வரும் ஈ வி பி பிலிம் சிட்டியில் சில காட்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் ஒரு சில தினங்களுக்கு முன்பு தி நகரில் உள்ள பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டலில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல் அவர்களுடன் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது நடித்து வருகின்றார்.

ஏற்கனவே வெளிவந்த இந்தியன் படத்தின் கிளைமாக்ஸில் கமல் அவர்கள் இந்தியாவிலிருந்து தப்பித்து, வெளிநாட்டிலிருந்து போன் செய்வது போன்ற காட்சிகளும், அதோடு இந்தியனுக்கு சாவே கிடையாது என்று கூறிருப்பார். அதனால் இந்தியன் 2 படத்தின் தொடக்கம் வெளிநாட்டிலிருந்து ஆரம்பமாகும் என்று சொல்லப்படுவதால் இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் ஒரு மாதம் வரை நடக்க இருக்கின்றது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here