கவுதம் கார்த்திக்கின் தேவராட்டம் படம் ஒரு பார்வை

தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு பெரிய இடத்தை பிடிக்க போராடி வரும் நடிகர்தான் கௌதம் கார்த்திக் இன்று இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் தேவராட்டம் படம் எப்படி இருக்கு என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்
ஊரில் எந்த தப்பு நடந்தாலும் முதல் ஆளாக தட்டிக்கேட்க்கும் கதாபாத்திரத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார்.இவருக்கு 6 அக்காவிற்க்கு கடைசி தம்பியாக இருக்கும் கௌதம் கார்த்திக்கை அவர்கள் தம்பி என்று பார்க்காமல் தங்களுடைய மகனாக நினைத்து வளர்த்து, வக்கீலுக்கும் படிக்க வைக்கின்றனர்.

அந்த சமயத்தில் பெண்களை செல் போனில் தவறாக படம்பிடிக்கும் ஒருவனை ஒரு பெண் நடுரோட்டில் செருப்பால் அடிக்கின்றார், இந்த வீடியோ ட்ரெண்ட் ஆகின்றது. இன்னொரு பக்கம் அந்த பெண் கடத்தப்பட்டு பலரால் பலாத்காரம் செய்யப்பட்டு, மோசமான நிலைக்கு தள்ளப்படுகின்றார்.

வக்கீலுக்கு படித்த கௌதம் கார்த்திக்கு இந்த கேஸ் வர, இந்த கொடூரமான நாச வேலையை செய்தவன் மதுரையில் பெரிய ரவுடியான பெப்சி விஜயனுடைய மகனிடம் உதவி கேட்க, ஒரு கட்டத்தில் கௌதம் கார்த்திக்கும், பெப்சி விஜயன் மகனுக்கு மோதல் ஏற்படுகிறது இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
கௌதம் கார்த்திக்:-
அடல்ட் கதைகளில் மட்டுமே இனிமே கௌதம் கார்த்திக் நடிப்பார் என்று பேசப்பட்டவர்களுக்கு சரியான பதிலடியை இந்த படத்தில் கொடுத்துள்ளார். முக்கியமாக இவர் இதுவரை நடித்த படங்களில் இதில் கொஞ்சம் மெனக்கெட்டு நடித்துள்ளார் என்பது படத்தை பார்க்கும் போது தெரிகிறது. இவருக்கு எப்படி மதுரை பையன் கதாபாத்திரம் செட் ஆகும் என்று நினைத்தால் அது தவறு என்றே சொல்லலாம், அந்தளவுக்கு முதல் காட்சியிலிருந்து படம் முழுக்க தப்பு செய்தவர்களை பறந்து பறந்து பந்தாடுகிறார். அது போல இந்த படத்தில் வரும் மதுரை பலபலக்குது பாடலுக்கு இறங்கி குத்தாட்டம் போட்டுருக்கிறார்.

மஞ்சிமா:-
மஞ்சிமாவிற்கு இந்த படத்தில் பெரியதாக வேலை இல்லை என்றாலும், படத்தில் அவர் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றது,குறிப்பாக கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா ஜோடி மிக அழகாக உள்ளது. இதுமட்டுமில்லாமல் சூரியின் காமெடி பல நாட்களுக்கு பிறகு நம்மை சிரிக்க வைக்கின்றது, கௌதமின் மாமாவாக வரும்போது இருவரும் செய்யும் கலாட்டா மற்றும் கவுண்டர் என முதல் பாதி வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றது.

இப்படத்தை பொறுத்தவரை எமோஷனல் காட்சிகள் அதிகமாக இருப்பது போல் வசனகளும் மிக சிறப்பாக உள்ளது . அந்த வகையில் பசி தெரியாத வளர்க்கனும்னு நினைச்சோம், இப்படி பயம் தெரியாம வளர்ந்துட்ட, என்று தன் தம்பிக்காக பாசத்தை பொழியும் அக்கா, அவருடைய கணவர் போஸ் வெங்கட் என இந்த படத்தில் நடித்த எல்லோரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், செண்டிமெண்டிற்கு பஞ்சமில்லை.

படத்தின் மிகப்பெரும் பலம் என்றால் ஒளிப்பதிவு மற்றும் இசை, மதுரையை ஊரை அப்படியே கண்களில் காட்டிய ஒளிப்பதிவு, இதற்கு மேலாக இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என நிவாஸ் பிரசன்னா இப்படத்தில் பட்டையை கிளப்புகின்றது.

க்ளாப்ஸ்
படத்தின் முதல் பாதி நல்ல விறுவிறுப்பாகவே செல்கின்றது.

எமோஷனல் காட்சிகளால் குடும்பங்கள் பார்க்கக்கூடிய படம்

படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை.

பல்ப்ஸ்
சண்டை காட்சிகள் படம் முழுவதும் இருப்பதால் கொஞ்சம் ஏமாற்றம்

மொத்தத்தில் சமுதாயத்தில் இதற்கு முன்பு சொன்ன கதையாக இருந்தாலும் விறுவிறுப்புக்கு குறைவில்லாதால் ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *