ராட்சசன் 2 விரைவில் – இயக்குனர் ராம் திட்டவட்டம்

என்னதான் சர்ச்சைகள் சூழ்ந்தாலும் தன் தொழில்லில்  முனைப்போடு செயல்படுபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் தொடர்ந்து  அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் தனது சினிமா வாழ்க்கையில் பல நம்பிக்கைக்குரிய இயக்குனர்களுடன் இணைந்துள்ளார். அவர்களில் ஒருவர் கவனிக்க வேண்டியவர் என்றால் அது இயக்குனர் ராம் குமார்.

விஷ்ணு விஷால் 2014-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘முண்டாசுபட்டி’ என்ற நகைச்சுவை படத்திற்காக முதல் முறையாக இயக்குனர் ராம் குமாருடன் ஜோடி சேர்ந்தார். பின் ஆங்கிலத்தில் ஒரு வரி சொல்வார்களே “Then rest in history” அதே போல் படமும் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் ஆகி, விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.

மீண்டும், ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து 2018-ஆம் ஆண்டு வெளியான உளவியல் த்ரில்லர் படமான ‘ராச்சசன்’ கோலிவுட் திரைப்பட ஆர்வலர்களை பெரிதும் கவர்ந்தது. விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், இப்படம்  பாக்ஸ் ஆபிஸிலும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இப்போது, சமீபத்திய சலசலப்பு என்னவென்றால், விஷ்ணு விஷால் தனது பிளாக்பஸ்டர் ‘ராட்சசன்’ இயக்குனர் ராம்குமார் உடன் மீண்டும் இணையவுள்ளார்.

சமீபத்தில், ரசிகர் ஒருவர் ‘முண்டாசுபட்டி’ மற்றும் ‘ராட்ச்சசன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களையும் ஒப்பிட்டு, அதே இயக்குநர், அதே ஹீரோ, இரண்டு வெவ்வேறு உச்சம், ஆனால் ஒரே முடிவு, அது தான் ‘பிளாக்பஸ்டர்’ என்று விஷ்ணுவையும் ராம் குமாரையும் பாராட்டி மீம் வெளியிட்டிருந்தார். இதனை கவனித்த விஷ்ணு விஷால், தனது ட்விட்டர் பக்கத்தில் “ இயக்குநர் ராம் குமார்… 3வது எக்ஸ்ட்ரீமுக்கு காத்திருக்கிறேன்?” என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம், இந்த வெற்றிக் கூட்டணி விரைவில் மற்றோரு பிளாக்பஸ்டர் திரைப்படத்துக்காக இணையவுள்ளார் என்பது தெரியவந்துள்ளது

கதைகள் தேர்வு செய்வதற்காகவும், தனது சிறப்பான நடிப்புக்காகவும் ரசிகர்களிடமிருந்து அதிக பாராட்டுக்களைப் பெற்று வரும் விஷ்ணு, தற்போது ‘காடன்’, ‘ஜகஜால கில்லாடி’, ‘எஃப்.ஐ.ஆர்’ மற்றும் ‘மோகன் தாஸ்’ ஆகிய படங்களை கைவசம் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது !!

சினிமா பற்றிய தகவல்களை உடக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் படத்துடன் இணைந்திருங்கள் !!

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here