விஷாலின் அயோக்யா ஒரு பார்வை

பல படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்த விஷாலின் நடிப்பில் வெளிவந்துள்ள அடுத்த போலீஸ் படம்தான் அயோக்யா. படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

கதை:
சென்னையில் சட்டவிரோதமாக பல தொழில்கள் செய்து வரும் பார்த்திபனுக்கு இடையுறாக எந்த போலீசும் வரக்கூடாது என்றும் மோசமான ஒரு இன்ஸ்பெக்டரை கொண்டுவரவேண்டும் என்றும் மினிஸ்டரான சந்தானபாரதியிடம் கேட்கிறார். அவரும் விஷாலை சென்னையில் உள்ள நீலாங்கரைக்கு ட்ரான்ஸ்பர் செய்கிறார்.முக்கியமாக விஷால் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையில் இருக்க கூடிய மனிதராகவுள்ளார். ஒரு கட்டத்தில் பார்திபனின் 4 தம்பிகள் சேர்ந்து ஒரு பெண்னுக்கு செய்த கொடூரம் பற்றி தெரிந்து கொதித்தெழுகிறார். பார்திபனுக்கு உதவியா விஷால் தீடீர்ரென்று மாறி ஆதாரம் திரட்டி பார்த்திபனின் தம்பிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்:

இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் குற்றங்கள் அதிக அளவில் நாடு முழுவதும் எதோ ஒரு முலையில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றது. அப்படிப்பட்ட குற்றங்களை தடுக்க மிக கடுமையான தண்டனை மட்டுமே ஒரே வழி என்பதை வலியுறுத்தியுள்ளது அயோக்யா படம்.

தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்து வசூல் சாதனை புரிந்த டெம்பர் படம் பார்த்தவர்களுக்கு விஷாலை அந்த ரோலில் பொறுத்தி பார்த்து கட்சிதமாக இருக்கின்றதா என்று கேட்டால் அது சற்று யோசிக்க வேண்டிய விஷயமாகவே உள்ளது நமக்கு. இருந்தாலும் விஷாலின் நடிப்பு முதல் பாகத்தில் என்ன இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான போலீஸாக இருக்கிறாரே என்று நினைக்க வைத்தாலும், இரண்டாவது பாகத்தில் நான் அயோக்யமான போலீஸ் இல்லை என்று சொல்லி பார்வையாளர்களிடம் பாராட்டுகளை பெறுகின்றார்.

தெலுங்கு டெம்பர் படத்தை அப்படியே ரீமேக் செய்துயிருந்தாலும், கிளைமாக்ஸில் பெரிய மாற்றத்தை செய்துள்ளனர். படத்தில் வரும் வசனங்களும் கிட்டத்தட்ட தெலுங்கில் இருந்து எடுத்ததிருந்தாலும் பல வசனங்கள் படம் பார்ப்பவர்களை நிச்சயம் யோசிக்கவைக்கும் என்பதே குறிப்பிட்டு சொல்லவேண்டும்.

ஹீரோயின் ராஷி கண்ணாவுக்கு படத்தில் பெரிய வேலை இல்லை என்றாலும் இதற்கு முன்பு நடித்த படங்களை விட இதில் கொஞ்சம் வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றே சொல்லவேண்டும். இவர் மட்டுமில்லாமல் விஷால் வேலை செய்யும் போலீஸ் ஸ்டேஷனில் நேர்மையான ஏட்டாக இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் ஈர்த்துள்ளார். இவர்களை விட நடிகர் பார்த்திபன் காமெடி நக்கல் கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

கிளாப்ஸ்:

  • இன்றைய சமூகத்திற்கு தேவையான கதை
  • இரண்டாம் பாதியின் விறுவிறுப்பு
  • ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை.
  • விஷால் நடிப்பு

பல்ப்ஸ்:

  • முதல் பாதி கொஞ்சம் பரபரப்பு குறைவே தவிர குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு படத்தில் பெரிய மைனஸ் எதுவும் இல்லை.

மொத்தத்தில் அயோக்யா சமூகத்திற்கு சொல்லவேண்டிய முக்கிய கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *