Black Sheep-ன் புதிய வெப் சீரிஸ் ஆரம்பம் !

வெப் சீரிஸில் தமிழின் முதல் 100 மில்லியனை எட்டிய குழுவின் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் ஆரம்பம் ! இளம் வயதினரையும், குடும்பங்களையும் ஈர்க்கும் படைப்புகளுக்கு பெயர் பெற்ற Blacksheep குழு, YouTube தளத்தில் தமிழின் முதல் 100 மில்லியன் பார்வைகளை கடந்த வெப் சீரிஸாக சாதனை படைத்த “ஆஹா கல்யாணம்” என்ற முக்கோணக் காதல் கதையின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இப்போது மீண்டும் “கன்னி ராசி” என்ற தலைப்பில் (மூன்று: ஒன்று) காதல் கதையை துவங்குகிறது….

Read More

அனைவரது வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ‘டேக் டைவர்ஷன்’

“புதிய முயற்சிகளுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் ஆதரவு உண்டு” என்று படவிழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு: ஷிவானி ஸ்டுடியோஸ் எனும் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ டேக் டைவர்ஷன்’. இதில் கே ஜி எஃப் படப்புகழ் நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பாடினி குமார் நடித்திருக்கிறார். ‘கார்கில்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில் இயக்கியுள்ளார்.விரைவில் வெளியாகவிருக்கும்…

Read More

தென்னிந்திய திரைத்துறையை கலக்கும் நடிகை ரிது வர்மா !

தென்னிந்திய திரைத்துறையில் சிறந்த நடிகைகளில் ஒருவராக விளங்க கூடியவர் நடிகை ரிது வர்மா. நவநாகரீக நகர்ப்புற வேடங்களிலும் மற்றும் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற வேடங்களிலும் பொருந்தக்கூடிய அரிதானவர்களில் இவரும் ஒருவர். தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’ படத்தின் மூலம் கவனத்தைத் திருடியதில் இருந்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் தமிழ் மக்களைக் கவர்ந்தது வரை, ரிது வர்மா ஒரு சிறந்த நடிகையாக தனது திறனை நிரூபித்துள்ளார். தற்போது, அவர் அடுத்தடுத்து மிக சுவராஸ்யமான பல படங்களில்…

Read More

விருதுகளை சூறையாடிய சூரரைப்போற்று படக்குழு

ஓசகா தமிழ் திரைப்பட விழாவில் சூரரைப்போற்று படக்குழு 6 விருதுகளை வென்றுள்ளது ஓசகா தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை சூரரைப்போற்று படம் வென்றது,சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா வென்றார், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஜி.வி பிரகாஷ் வென்றார், சிறந்த இயக்குனருக்கான விருதை சுதா கொங்கரா வென்றார், சிறந்த தயாரிப்புக்காக 2டி என்டர்டைன்மெட் நிறுவனம் வென்றது, மற்றும் சிறந்த கலை இயக்குனருக்கான விருதை ஜாக்கி வென்றார்ரசிகர்களின் மனதை வென்ற சூரரைப்போற்று திரைப்படம் ஓசகா தமிழ் திரைப்பட…

Read More

‘குத்துக்கு பத்து’ படக்குழுவினர் கலந்துகொண்ட கல்லூரி கல்சுரல் விழா!

ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ தொடரின் படக்குழுவினர் கலந்துகொண்ட SSN எஞ்சினியரிங் கல்லூரி கல்சுரல் விழா! இளம் திறமையாளர்களை ஊக்கபடுத்திய குத்துக்கு பத்து குழு ! தமிழக ஓடிடி தளங்களில் தொடர்ந்து சிறந்த தொடர்கள், திரைப்படங்கள், ஒரிஜினல்கள் என வெளியிட்டு பார்வையாளர்களிடையே பாராட்டுக்களை அள்ளிய ஆஹா தமிழ் தளம் சமீபத்தில் யூடுயுப் பிரபலங்களான டெம்பிள் மங்கீஸ் குழுவை வைத்து ‘குத்துக்கு பத்து’ என்ற புதிய தொடர் ஒன்றை உருவாக்கி வெளியிட்டது. மே 13ஆம் தேதி ஆஹா…

Read More

நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்த முதலமைச்சர் என்ன சொன்னார் தெரியுமா ?

“நெஞ்சுக்கு நீதி” படத்தை பார்த்து வாழ்த்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் Zee Studios – போனி கபூர் அவர்களின் Bayview Projects மற்றும் ROMEOPICTURES ராகுல் இணைந்து தயாரிக்கும் “நெஞ்சுக்கு நீதி” படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். நேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் “நெஞ்சுக்கு நீதி” திரைபடத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்த பின்  “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன்…

Read More

கமலின் ‘விக்ரம்’ ட்ரெய்லரில் இதையெல்லாம் கவனித்தீர்களா

கமல் ஹாசன் ,விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் இவர்களின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் ஜூன் 3 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள படம்தான் தான் விக்ரம், இந்த படத்தின் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது இந்நிலையில் விக்ரம் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது அதனை சினிமா வட்டாரங்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள், இந்த ட்ரைலரில் நீங்கள் இதையெல்லாம் கவனித்தீர்களா… மேலே உள்ள லிங்கில் சென்று பாருங்கள் Vikram Movie Trailer Review Clik…

Read More

விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்..’

சுசீந்திரன் இயக்கத்தில் திண்டுக்கல்லில் இன்று படபிடிப்பு ஆரம்பமானது. நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில்,சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’ படபிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது.படபிடிப்பை கிளாப் அடித்து துவக்கி வைத்தார் தமிழ் நாடு உணவு துறை அமைச்சர் திரு.சக்கரபாணி அவர்கள்.திண்டுக்கல்லிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூத்தம்பூண்டி ஊரிலுள்ள சிவன் கோவிலில் ஆரம்பமான இதன் படபிடிப்பு திண்டுக்கல் சுற்றி தொடர்ந்து 30 நாள்கள் நடைபெறுகிறது. முதல் நாள்…

Read More

விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு, ‘குஷி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ‘குஷி’ திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘குஷி’ திரைப்படத்தை இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்குகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் பார்வையாளர்களை கவரும் வகையில் தோன்றுகின்றனர்….

Read More