தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் வெற்றியை கொண்டாடிய ‘எல். ஜி. எம்’ படக் குழு

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரரான தோனியின் புத்திசாலித்தனமான அதிரடி ஆட்டத்தை நேரில் கண்டு, ‘எல். ஜி. எம்’ பட குழுவினர் வியந்து பாராட்டிக் கொண்டாடினர். சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. இந்த போட்டியை நேரடியாகக் காண தோனி என்டர்டெய்ன்மென்ட் குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விறுவிறுப்பான படப்பிடிப்பு பணிகளுக்கிடையே தோனியின் தயாரிப்பில் உருவாகும் ‘எல். ஜி. எம்’ பட குழுவினர் இன்ப…

Read More

‘அச்சம் என்பது இல்லையே’ – மிஷன்  சாப்டர் 1 படத்தின் உரிமத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் பெற்றுள்ளார்

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘அச்சம் என்பது இல்லையே’ – மிஷன்  சாப்டர் 1 படத்தின் உரிமத்தை பெற்றுள்ளார் லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் உரிமையை  பெற்று, உலகம் முழுவதும் வெளியிட உள்ளார். படத்தினை எம். ராஜசேகர் & எஸ்.சுவாதி தயாரித்துள்ளனர். சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் எப்போதும் நல்ல படங்களுக்கு மதிப்பு தரக்கூடியது. தனித்துவமான கதைகள் மற்றும் நம்பிக்கைக்குரிய…

Read More

சந்தானம் நடிக்கும் ’வடக்குபட்டி ராமசாமி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

‘வடக்குபட்டி ராமசாமி’ திரைப்படம் குறித்தான அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே இந்தப் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நடிகர் சந்தானம்-இயக்குநர் கார்த்திக் யோகியின் முந்தைய ‘டிக்கிலோனா’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியும் இதற்கு முக்கியக் காரணம். இப்படம் அதன் எண்டர்டெயின்மெண்ட் விஷயங்களுக்காக பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றது. இப்போது, இந்தக் கூட்டணி மற்றொரு வசீகரிக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த, அனைத்து விதமான பார்வையாளர்களுக்கும் பிடித்த வகையிலான அடுத்தக் கதையுடன் வந்திருக்கிறார்கள். தற்போது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக படக்குழுவினர்…

Read More

நடிகர் சூர்யா துவங்கி வைத்த, இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரியின் ‘குட்லக் ஸ்டூடியோஸ்’ !!

திரைத்துறை பணிகளான ரெக்கார்டிங், டப்பிங், எடிட்டிங் பணிகளை நவீன வசதிகளுடன் திறம்பட செய்யும் புதிய குட்லக் ஸ்டூடியோவை இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவங்கியுள்ளனர். தமிழின் பெரும் அரசியல் ஆளுமைகள் கலந்துகொண்ட இவ்விழாவில் நடிகர் சூர்யா, தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர் மாண்புமிகு எம்.அப்பாவு எம்.எல் .ஏ தமிழக அமைச்சர்கள் மாண்புமிகு அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் mla, மாண்புமிகு பி.கே.சேகர் பாபு mla, மாண்புமிகு டி.மனோ தங்கராஜ் mla, டைரக்டர் ஹரி தந்தை கோபாலகிருஷ்ணன், ஹரியின் மாமனார்…

Read More

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் ‘ரெயின்போ’ – பிரதான கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா

எஸ். ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தனது அடுத்த தயாரிப்பு ‘ரெயின்போ’ திரைப்படத்தை அறிவித்துள்ளது. நடிகை ரஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, ஃபேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக உருவாகவுள்ளது. தங்களின் முதல் படைப்பிலிருந்தே, தனித்துவமான கதைககளன்களுடன், தரமான திரைப்படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். ‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து தங்களின் முத்திரையைப் பதித்து…

Read More

“பாபா பிளாக்‌ ஷீப்” படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் “பாபா பிளாக்‌ ஷீப்”. தற்கால பள்ளிக்குழந்தைகளின் விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் இணைந்த ஒரு அழகான திரைக்கதையாக, உணரச்சிகரமான டிராமாவாக “பாபா பிளாக்‌ ஷீப்” உருவாகிறது. அயாஸ், நரேந்திர பிரசாத், அம்மு அபிராமி, RJ விக்னேஷ்காந்த் சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘விருமாண்டி’ அபிராமி…

Read More

கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்

கீழடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் இன்று பார்வையிட்டனர். கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டது. உலகதரத்தில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழர்களின் தொல்லியல் வரலாற்றை பறைசாற்றும் இந்த…

Read More

ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்”  தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

ZEE5 நிறுவனம் அடுத்த வெளியீடாக ஜெயம்ரவி நடிப்பில் மாபெரும் வெற்றிப்படைப்பான “அகிலன்” படத்தின்  அதிகாரப்பூர்வ உலக டிஜிட்டல் ப்ரீமியரை அறிவித்துள்ளது!!! முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில்  ‘அகிலன்’ திரைப்படம் கடந்த மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை ZEE5 ஓடிடி தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் N.கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில், இந்தத் திரைப்படத்தில் ஜெயம் ரவி அப்பா மற்றும் மகனாக…

Read More

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடியான வெப் சீரிஸை அறிவித்துள்ளது !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. இந்த வெப் சீரிஸில், இந்தியா முழுவதும் புகழ்பெற்ற நடிகர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தேசியவிருது வென்ற இயக்குநர் M.மணிகண்டன் இயக்குகிறார். இயக்குநர் M.மணிகண்டன் ‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ போன்ற விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட, சூப்பர்ஹிட் படைப்புகளை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய்…

Read More

இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் கன்னியாகுமரியில் தொடங்கியது. மேலும் இந்த முதல் ஷெட்யூலில் படக்குழு முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்குகிறது. அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ​​ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல நடிகர்கள் பலர் நடிக்கும் இந்தப் படத்தில்…

Read More