‘சூர்யா 43’ காக மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி

சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் மிகவும் சவாலான பாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் , விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படமிது. இந்தத் திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு…

Read More

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட “பிரம்ம முகூர்த்தம்” பட ஃபர்ஸ்ட் லுக் !!

KV Media தயாரிப்பாளர் P செந்தில்நாதன் வழங்க, இயக்குநர் TR விஜயன் இயக்கத்தில், விஜய் விஷ்வா, அபர்ணா நடிப்பில் காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள “பிரம்ம முகூர்த்தம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் ஆகியோர் வெளியிட்டனர். காமெடி ஜானரில் மாறுபட்ட திரை அனுபவமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரு இளம் ஜோடியின் திருமண ஏற்பாட்டில்…

Read More

பிரம்மாண்டமாக தொடங்கியது ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ திரைப்படம்

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி மற்றும் திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயா இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இந்த கூட்டணியின் முதல் திரைப்படமான ‘அந்தே சுந்தரனிகி’ முழு நீள பொழுதுபோக்கு திரைப்படமாக இருந்தாலும், இரண்டாவது படைப்பான ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஒரு தனித்துவமிக்க அதிரடி மற்றும் மாஸான ஆக்சன் அவதாரத்தில் நானி வழங்கிய அன்செயின்ட் Unchained எனும் வீடியோ மக்களை உற்சாகப்படுத்தியது. டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் இணைந்து…

Read More

தளபதி 68 திரைப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ‘பிகில்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது…

Read More

தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது கிடா (Goat) திரைப்படம் !!

ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா (Goat) திரைப்படத்தின் டிரெய்லர் இணைய ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினர் இப்படம் தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கிடா திரைப்படம் உலகளவில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாரட்டுக்களை குவித்துள்ளது. இப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. மேலும்…

Read More

‘டெவில்’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகை எல்னாஸ் நோரூஸி, ‘ரோஸி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்

நந்தமுரி கல்யாண் ராம் திரையுலகில் அறிமுகமாகும் போதே தனித்துவமான திரைக்கதைகளை தேர்வு செய்து நடித்து நற்பெயரை சம்பாதிப்பதில் பெயர் பெற்றவர். இவர் தற்போது மற்றொரு சுவாரசியமான திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தை குறிக்கும் வகையில் ‘டெவில்’ என பரபரப்பாக பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ‘பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட்’ என்ற வாசகத்துடன் வெளியாகிறது. இப்படத்தை அபிஷேக் நாமா இயக்கி, தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த…

Read More

லியோ தமிழ் திரைப்பட விமர்சனம்

லியோ கதை இமாச்சல பிரதேசத்தில் உள்ள தியோக் என்ற பகுதியில் பார்த்தி ( தளபதி விஜய் ) தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார். அங்கு அவர் ஒரு காஃபி ஷாப் வைத்துள்ளார். மிஷ்கின் தனது கூட்டத்துடன் அந்த காஃபி ஷாப்- கு செல்கின்றனர், அங்கு நடந்த சில விஷயங்களால் பார்த்தி அவர்கள் அனைவரையும் கொலை செய்கிறார். இதனால் சில பிரச்சனைகளையும் சந்திக்கிறார். அணைத்து பிரச்சனைகளும் தீர்ந்தது என நினைக்கும் சமயத்தில். செய்தித்தாளில் இவரின் புகைப்படத்தை பார்த்த சிலர்…

Read More

’டைகர் 3’ டிரைலருக்கு கிடைத்த வரவேற்பால் சல்மான் கான் & கத்ரீனா கைப் மகிழ்ச்சி

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் இருவரும் யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸில் லேட்டஸ்ட்டாக உருவாகியுள்ள ‘டைகர் 3’ படத்திற்காக மீண்டும் தங்களது அடையாளங்களான டைகர் மற்றும் சோயா என்கிற சூப்பர் ஏஜென்ட் கதாபாத்திரங்களுக்கு திரும்பியுள்ளனர். சமீபத்தில் தயாரிப்பாளர்கள் வெளியிட்ட ‘டைகர் 3’யின் டிரைலர் உனடியாக இணையத்தை அதிரவைத்ததுடன், ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை, வார் மற்றும் பதான் ஆகிய யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களின் வெற்றிப்படங்களுக்கு மொத்தமாக…

Read More

பிரபல நடிகர் விச்சு விஸ்வநாத் மகளுக்கு விரைவில் திருமணம் !

தமிழ்த்திரைப்படங்களில் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகர் விச்சு விஸ்வநாத். இவரது மகள் கோகிலாவின் திருமணம் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. பல திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் இத்திருமணத்தில் பங்கேற்கவுள்ளனர். தமிழ் திரையுலகில் இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் 1990 ல் வெளியான, ‘சந்தனக்காற்று’ படம் மூலம் வில்லனாகத் திரையுலகில் கால்பதித்தவர் விச்சு விஸ்வநாத். வில்லனாக மட்டுமல்லாமல், குணச்சித்திரம், காமெடி எனப் பல படங்களில் ஜொலித்தவர், இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குநர்…

Read More

ஆக்சன் விருந்தாக அமைய இருக்கும் ‘டைகர் 3’ நவம்பர்-12 ஞாயிறன்று வெளியாகிறது

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘டைகர் 3’ டிரைலரை ஆதித்யா சோப்ரா வெளியிட்டதை தொடர்ந்து அது இணையத்தை புயலாக தாக்கி வருகிறது. மேலும் அந்த டிரைலரிலேயே இருக்கையின் நுனியில் அமர வைக்கும் ஆக்சன் திரில்லரான இந்த ‘டைகர் 3’ நவம்பர் 12 ஞாயிறு அன்று வெளியாகும் என்கிற அறிவிப்பையும் யஷ்ராஜ் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. தீபாவளிக்கு இந்த படத்தை திரையிடும் விதமாக யஷ்ராஜ் பிலிம்ஸ் தனித்துவமான மற்றும் யுக்தியான சில திட்டங்களை வைத்திருக்கிறது. 2023 என்பது ‘ஆதிக் மாஸ்’ வருடம்…

Read More