35 சின்ன விஷயம் இல்ல கதை
திருப்பதியில் பிரசாத் & சரஸ்வதி தம்பதியினர் இருக்கிறார்கள். இவர்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் அதில் அருணுக்கு கணக்கு பாடம் என்றாலே பயம், இவனுக்கு கணக்கு சுத்தமாக வராது. அப்போது பள்ளியில் சாணக்கியா என்ற கணக்கு வாத்தியார் புதிதாக சேருகிறார்.
Read Also: The Smile Man Tamil Movie Review
ஆசிரியர் சாணக்கியாவால் அருணுக்கு சில பிரச்னைகள் வருகிறது. இந்த பிரச்சனையால், குடும்பத்தில் பிரச்சனை வெடிக்கிறது. கணக்கு வராததால் அருண் அடுத்த வகுப்பிற்கு போகாமல் இருக்கிறான். வருகிற தேர்வில் கணக்கில் 35 மதிப்பெண் எடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் அருண், கஷ்டப்பட்டு படித்து கணக்கில் 35 மதிப்பெண் எடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் நந்த கிஷோர் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡நிவேதா தாமஸ் நடிப்பு
➡சிறுவனின் நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡தமிழ் டப்பிங்
➡வசனங்கள்
படத்தில் கடுப்பானவை
➡கடுப்பாகும் அளவிற்கு எதுவும் இல்லை
ரேட்டிங்: ( 3.5 / 5 )