மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் 18 வருடங்கள் கழித்து ஜோடி சேர்ந்த த்ரிஷா கிருஷ்ணன் !!

மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது அடுத்த பிரம்மாண்ட படமான “விஸ்வம்பரா” படத்திற்காக, சில நாட்களுக்கு முன்பு தான், ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்ட செட்டில் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த பிரம்மாண்ட படத்திற்காக ஹைதராபாத்தில் மொத்தம் 13 பிரம்மாண்ட செட்களை படக்குழு அமைத்துள்ளது. இதற்கிடையில், இப்படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா கிருஷ்ணனை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

நடிகை த்ரிஷா இன்று நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இயக்குநர் வசிஷ்டா மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரும் இணைந்து நடிகை திரிஷாவுக்கு பெரும் வரவேற்பு அளித்தனர். முன்னதாக நடிகை திரிஷா, மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் “ஸ்டாலின்” படத்தில் பணிபுரிந்துள்ளார். தற்போது மெகா மாஸ் ஃபேண்டஸி உலகை காட்டும் “விஸ்வம்பரா” படத்தில், சிரஞ்சீவியுடனான மேஜிக் கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் மீண்டும் எதிர்பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டு சங்கராந்தி கொண்டாட்டமாக ஜனவரி 10 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

நடிப்பு : மெகா ஸ்டார் சிரஞ்சீவி

தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர் மற்றும் இயக்குநர்: வசிஷ்டா தயாரிப்பாளர்கள்: விக்ரம், வம்சி, பிரமோத்
பேனர்: UV கிரியேஷன்ஸ்
இசை: எம்.எம்.கீரவாணி
ஒளிப்பதிவு : சோட்டா கே நாயுடு
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஏ.எஸ்.பிரகாஷ்
ஆடை வடிவமைப்பாளர்: சுஷ்மிதா கொனிடேலா
எடிட்டர்: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், சந்தோஷ் காமிரெட்டி
வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா
பாடல் வரிகள்: ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ்
ஸ்கிரிப்ட் அசோசியேட்ஸ்: ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மதி ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா
நிர்வாகத் தயாரிப்பாளர்: கார்த்திக் சபரீஷ்
லைன் புரடியூசர்: ராமிரெட்டி ஸ்ரீதர் ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைமங்கை திரைப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் கயல் ஆனந்தி !!
அடுத்த கட்டுரைஇயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘பேபி ஜான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது