ஒன்ட்ராக ஒரிஜினல்ஸின் அடுத்தப் படைப்பு ‘ராசாத்தி’!

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் ஒன்ட்ராக என்டர்டெயின்மென்ட் புதிய திறமையாளர்களை ஊக்குவித்து ஆதரவளிக்கும் விதமாக அவர்களுடன் இணைந்து பல இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறது. ஒரு ஊரில் ஒரு ஃபிலிம் ஹவுஸ் உடன் இணைந்து ஒன்ட்ராக என்டர்டெயின்மென்ட் திரைப்படங்கள், உயர்தர இசை வீடியோக்கள், குறும்படங்கள் மற்றும் பிற ஒரிஜினல் கண்டெண்ட்களைத் தயாரித்து வருகிறது. நம் வழக்கமான பாரம்பரிய சினிமாவிற்கு அப்பாற்பட்டு பலதரப்பட்ட பார்வையாளர்களின் பாராட்டுகளையும் இது பெற்று வருகிறது.

ஒன்ட்ராக ஒரிஜினல்ஸ், ஒரிஜினல் மற்றும் சுயாதீன இசைக்கான அவர்களின் பிரிவு, அதன் புதுமையான மற்றும் ஈர்க்கக்கூடிய கதைசொல்லலுக்கு பெயர் பெற்றது. இதைத்தாண்டி அடிக்கடி புது தீம் மற்றும் ஜானர்களையும் அது முயற்சி செய்து பார்த்து வருகிறது. புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் மற்றும் புது இசைக்கலைஞர்களுடன் இணைந்து மறக்கமுடியாத ஒலிப்பதிவுகளை உருவாக்கி வருகிறது.

டோவினோ தாமஸ் மற்றும் திவ்யதர்ஷினி நடித்த ’உலவிரவு’, அதர்வா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’போதை கோதை’, நடன இயக்குநர் சதீஷ் நடித்த ’கூவா’ என ஒன்ட்ராக எண்டர்டெயின்மெண்டின் புகழ்பெற்ற இவை அனைத்தையும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்க, கார்த்திக் இசையமைத்திருக்கிறார். இவை அல்லாமல், கெளதம் மேனன் இசையமைத்து நடித்த ‘முத்த பிச்ச’ மற்றும் டீஜே-யின் ‘எரிமலையின் மகளே’ போன்றவற்றையும் குறிப்பிட்டு சொல்லலாம்.

இவற்றை அடுத்து ஒன்ட்ராக ஒரிஜினல்ஸின் அடுத்தப் படைப்பு ‘ராசாத்தி’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் கெளஷிக் சுந்தரம், வைபவ் டான்டில் நடித்திருக்க ‘ஓ பேபிகேர்ள்’, ‘பொண்டாட்டி நீ’ புகழ் அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கிறார். இதன் புரோமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதை ஆதவ் சரண் கண்ணதாசன் இயக்கி இருக்கிறார் மற்றும் ஆர்ட்வென்ச்சர் பிலிம்ஸ் மற்றும் பிளாஷ்பேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

மியூசிக் வீடியோ ஜூலை 24, 2024 அன்று வெளியிடப்பட உள்ளது. இதன் அடுத்தடுத்த அப்டேட்டை படக்குழு வெளியிடும்.

 

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைடெட்பூல் & வால்வரின் இறுதி டிரெய்லரில் லோகனின் மகள் ரிட்டர்ன், லேடி டெட்பூல் மற்றும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது!
அடுத்த கட்டுரை57வது வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன் ரெமி விருது 2024 இல் வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான வெண்கலப் பதக்கத்தை ‘பராரி’ திரைப்படம் பெற்றுள்ளது