ஜமா கதை
திருவண்ணாமலை அருகில் ஒரு கிராமத்தில் ராமச்சந்திர நாடக சபா ஒன்று உள்ளது. இப்படி நாடகம் போடும் குழுவின் பெயர்தான் ஜமா ஆகும். ராமச்சந்திர நாடக சபா குழுவின் தலைவர் தான் தாண்டவம், இவரின் குழுவில் இருப்பவர்தான் கதையின் நாயகன் கல்யாணம். இவர் தொடர்ந்து நாடகத்தில் பெண் வேடம் போடுவதால், திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் போகிறது. இதனாலேயே இவரின் அம்மா வேதனைபடுகிறார்.
தாண்டவத்தின் மகளான ஜகா கல்யாணத்தை சிறுவயதிலிருந்தே ஒருதலையாக காதலிக்கிறார். இதனை அறிந்த தாண்டவம், கல்யாணத்தை நாடக குழுவிலிருந்து நீக்குகிறார். ஆனால் கல்யாணம் நாடக குழுவிலிருந்து விலக விரும்பவில்லை. கடைசியில் கல்யாணத்திற்கு ஜகாவிற்கும் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதும். கல்யாணம் ஏன் இந்த ஜமாவிலிருந்து விலகவில்லை என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் பாரி இளவழகன் நடித்து, சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡அனைவரின் நடிப்பு
➡வசனங்கள்
➡இசைஞானியின் பாடல்கள் & பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
➡இடைவேளைக்காட்சி
படத்தில் கடுப்பானவை
➡சுற்றிவளைக்கும் இரண்டாம்பாதி கதைக்களம்
ரேட்டிங்: (3.25 / 5)