நீல நிறச் சூரியன் கதை
கதையின் நாயகன் அரவிந்த் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார். அவருக்கு பெண் தன்மை அதிகமாக இருப்பதால், ஒரு மருத்துவரிடம் 9 மாதங்களாக சிகிச்சை எடுத்து வருகிறார். அப்போது அவருடன் பள்ளியில் வேலை செய்யும் ஹரிதா என்பவர் அரவிந்துக்கு உதவியாக இருக்கிறார்.
ஒருநாள் அரவிந்த் வீட்டில் திருமணம் செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள், ஆரம்பத்தில் வேண்டாம் என சொன்னவர் ஒருகட்டத்தில் உண்மையை போட்டு உடைய்த்துவிடுகிறார். பிறகு இவர் பெண்ணாக மாறுகிறார். அரவிந்த், பானுவாக மாறிய பிறகு இவர் பள்ளியிலும், குடும்பத்திலும் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொண்டார் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் சம்யுக்தா விஜயன் அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை படமாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡சம்யுக்தாவின் சிறப்பான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡திரைக்கதை
➡வசனங்கள்
➡ஒளிப்பதிவு
➡படத்தில் ஒருசில காட்சிகள்
படத்தில் கடுப்பானவை
➡பெரிதாக எதுவும் இல்லை
ரேட்டிங்: (3 / 5)