சீசா தமிழ் திரைப்பட விமர்சனம்

’சீசா’ கதை

இளம் தொழிலதிபர் நிஷாந்த் ரூசோ மற்றும் அவரது காதல் மனைவி பாடினி வசிக்கும் வீட்டில் வேலை செய்யும் ஆண் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதே சமயம், அந்த வீட்டில் இருந்த நிஷாந்த் ரூசோ அவரது மனைவி பாடினி குமார் மாயமாகி விடுகிறார்கள். அந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட்டிஸ்க்கும் மாயமாகி விடுகிறது. கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜ், மாயமான தம்பதியையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

Read Also: Xtreme Tamil Movie Review

விசாரணையில் நிஷாந்த் ரூசோ பற்றி பல அதிர்ச்சிகரமான விசயங்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜுக்கு தெரிய வருகிறது. மாயமான நிஷாந்த் ரூசோ மட்டும் மீண்டும் தனது வீட்டுக்கு வருகிறார். அவருடன் இருந்த அவரது மனைவி என்ன ஆனார்? என்பது குறித்து போலீஸ் அவரிடம் விசாரிக்கும் போது, அவர் சரியான மனநிலையில் இல்லை என்பது தெரிய வருகிறது. பாடினியின் நிலை என்ன? என்பதை கண்டுபிடிப்பதற்காக, வேறு கோணத்தில் விசாரணை மேற்கொள்ளும் நட்டி நட்ராஜுக்கு, அதிர்ச்சிகரமான உண்மையும், பாடினியின் நிலையும் தெரிய வருகிறது. அது என்ன ?, அதன் பின்னணியில் இருப்பது யார் ? என்பது தான் படத்தின் மீதிக்கதை….

இந்த கதையினை அறிமுக இயக்குனர் குண சுப்பிரமணியம் இயக்கியுள்ளார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஎக்ஸ்ட்ரீம் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைகலன் தமிழ் திரைப்பட விமர்சனம்