எம்புரான் கதை
லூசிஃபர் 1 எங்கு முடிந்ததோ அங்கிருந்து இந்த எம்புரான் கதை தொடஙங்குகிறது.
கதையின் ஆரம்பத்தில் 2002-ல் வடமாநிலத்தில், பால்ராஜ் என்கிற நபர் மதக்கலவரத்தை தொடங்குகிறார். அதில் பல முஸ்லிம்களை கொடூரமாக கொலை செய்கிறார். அதிலிருந்து ஒரு சின்ன பையன் மட்டும் தப்பித்துவிடுகிறான். அடுத்து காலங்கள் பல போகிறது.
Read Also: Veera Dheera Sooran Part 2 Tamil Movie Review
கேரளாவை ஆட்சிசெய்துகொண்டிருக்கும் ஜித்தின் ராமதாஸ், மக்களை கொடூரமாக ஆட்சி செய்கிறார். அதுமட்டுமல்லாமல் தான் தற்போது இருக்கும் கட்சியிலிருந்து விலகி புதிதாக கட்சியை தொடங்கி, பால்ராஜுடன் இணைகிறார். இதனை அறிந்த அக்கா பிரியதர்ஷினி எதிர்க்கிறார், அதே நேரத்தில் இந்த விஷயம் ஸ்டீபனுக்கு தெரிந்ததும் என்னவெல்லாம் செய்கிறார் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை நடிகரும், இயக்குனருமான பிரித்விராஜ் சுகுமாறன் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡மோகன்லால் அசத்தலான நடிப்பு
➡மற்ற அனைவரின் சிறப்பான நடிப்பு’
➡தமிழ் டப்பிங்
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
➡படம் உருவாக்கப்பட்ட விதம்
படத்தில் கடுப்பானவை
➡படத்தின் நீளம்
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
ரேட்டிங்: ( 3 / 5 )