பரிமளா & கோ (2026) – முன்னோட்டம்
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, மிஸ்கின், சஞ்சனா, சாண்டி, அனந்திகா ஆகியோர் நடித்து இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பரிமளா & கோ. பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
பரிமளா & கோ கதை
பரிமளா (ஜெயராம்), சுதந்திரம் (ஊர்வசி) தம்பதிக்கு இரு மகள்கள். இதில் மூத்த மகள் பராசக்தி (சஞ்சனா), இளைய மகள் மதுமிதா (அனந்திகா). வரவு செலவு பார்த்து, அதில் மிச்சம் பிடித்து வாழும் மிடில் கிளாஸ் (Middle Class) ஃபேமிலி தான் இந்த பரிமளா & கோ. இப்படியொரு சூழலில் பரிமளாவின் இளைய மகள் மதுமிதாவுக்கு காதல் தொல்லை கொடுத்து வருகிறார் வர்கீஸ் (சாண்டி). வீட்டிற்கு வந்து தொல்லை செய்வது, தெருவில் வரும்போது அத்துமீறுவது, முத்தம் கொடுப்பது, மதுமிதா அக்கா பராசக்தியிடம் பிரச்சனை செய்வது என தொடர்ந்து பரிமளாவின் வீட்டில் உள்ளவர்களை தொந்தரவு செய்து வருகிறார்.

இந்த நிலையில், வர்கீஸை கொலை செய்துவிடலாம் என பரிமளா முடிவு எடுக்கிறார். இவர் சொன்ன நேரமோ என்னமோ, வர்கீஸை கொலை செய்துவிடுகின்றனர். இதன்பின், இந்த கொலையை யார் செய்தது என்பதை தேட போலீஸ் தொடங்குகிறது.பரிமளா வீட்டில் உள்ள யாரோ ஒருவர்தான் கொலை செய்தாரா? அல்லது வேறு யாராவது வர்கீஸை கொன்றார்களா? எதற்காக கொலை செய்தார்கள்? இதன் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதி கதை.

Read Also: Peddi Movie Review
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡ஊர்வசி, ஜெயராம், மிஸ்கின், சஞ்சனா, சாண்டி மற்றும் அனந்திகா நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡நகைச்சுவை காட்சிகள்
➡ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை
➡கிளைமாக்ஸ் காட்சி
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
➡தேவையற்ற கதாபாத்திரங்கள்
ரேட்டிங்: ( 2.75 / 5 )




























