ஆட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆட்டி (2026) – முன்னோட்டம்

டி. கிட்டு இயக்கத்தில், தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் கதையின் நாயகனாக நடித்து தயாரித்துள்ள திரைப்படம் தான் ‘ஆட்டி’. ‘அயலி’ வெப் சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த அபி நட்சத்திரா இதில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆட்டி கதை

இந்த கதை 1970-களில் கொடைக்கானல் மலைப்பகுதிகள் மற்றும் மதுரையை பின்னணியாகக் கொண்டு தொடங்குகிறது. பழந்தமிழ் வரலாற்றில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக எவ்வாறு போராடினார்கள், சமுதாயத்தில் அவர்கள் எதிர்கொண்ட பாலியல் சீண்டல்கள் மற்றும் சவால்களை எப்படி தைரியமாக கையாண்டார்கள் என்பதை மையமாக வைத்து இந்த பீரியட் க்ரைம் த்ரில்லர் (Period Crime Thriller) படம் உருவாக்கப்பட்டுள்ளது.

‘ஆட்டி’ – பெண்களின் உரிமை மற்றும் சமூக போராட்டத்தை 1970-களின் பின்னணியில் பேச முயற்சித்துள்ள ஒரு நேர்மையான படைப்பு. கமர்ஷியல் அம்சங்களை தாண்டி, சமூக அக்கறை உள்ள திரைப்படங்களை விரும்புபவர்கள் தாராளமாக ஒருமுறை தியேட்டரில் பார்க்கலாம்.

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡அபி நட்சத்திரா மற்றும் இசக்கி கார்வண்ணன்-ன் அட்டகாசமான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡1970-களின் பின்னணி
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு

படத்தில் கடுப்பானவை

➡வழக்கமான த்ரில்லர் கூறுகள்
➡மெதுவான திரைக்கதை மற்றும் பழக்கமான காட்சிகள்

ரேட்டிங்: ( 2.5 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஹபீபி தமிழ் திரைப்பட விமர்சனம்