மக்கள் தலைவா தமிழ் திரைப்பட விமர்சனம்

மக்கள் தலைவா (2026) – முன்னோட்டம்

இயக்குனர் ராம்தேவ் இயக்கத்தில், ரவி மரியா மற்றும் ராதாரவி முதன்மை பாத்திரங்களில் நடித்து ஜூன் 2026-ல் வெளியாகியுள்ள அரசியல் நையாண்டித் திரைப்படம் தான் இந்த ‘மக்கள் தலைவா’ (Makkal Thalaiva)

மக்கள் தலைவா கதை

அரசியல், ஆட்சி நிர்வாகம் பற்றி எந்தவொரு அடிப்படை அறிவும் இல்லாத, சாமானிய பின்னணி கொண்ட ‘தமிழ் குடிமகன்’ (ரவி மரியா) எதிர்பாராதவிதமாக தமிழகத்தின் முதலமைச்சராக மாறுகிறார். அவருக்குப் பின்னால் இருந்து “பிபி” எனப்படும் பச்சமுத்து பழனிமாணிக்கம் (ராதாரவி) என்ற மூத்த அரசியல் தலைவர் காய் நகர்த்துகிறார்.

அரசியல் களத்திற்குள் நுழைந்த பிறகு ரவி மரியா சந்திக்கும் சவால்கள் என்ன? ஓட்டுக்காக அரசியல் கட்சிகள் கொடுக்கும் போலி வாக்குறுதிகள், இலவசங்கள் மற்றும் தற்கால பிம்ப அரசியல் (Image building) போன்றவற்றை மிகக் கடுமையான நையாண்டியுடனும், நகைச்சுவையுடனும் விவரிக்கிறது ‘மக்கள் தலைவா’ திரைப்படம்.

தேர்தல் முடிந்து அரசியல் சூடு தணியாத இந்த நேரத்தில், தற்காலப் போலி அரசியலையும், வாக்குறுதிகளையும் பார்த்துச் சிரிக்கவும், அதே சமயம் மக்களின் பொறுப்பைப் பற்றிச் சிந்திக்கவும் வைக்கும் ஒரு சுமாரான ‘பொலிட்டிக்கல் சட்டையர்’ (Political Satire) மூவி!

Read Also: Dark Giant Movie Review

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡ரவி மரியா & ராதாரவியின்-ன் அட்டகாசமான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡சமகால அரசியல் நையாண்டி
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு

படத்தில் கடுப்பானவை

➡பலவீனமான முதல் பாதி
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை

ரேட்டிங்: ( 2.5 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைடார்க் ஜெயண்ட் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைபதினெண் கீழ்க்கணக்கு தமிழ் திரைப்பட விமர்சனம்