ஃபோட்டோகிராபர் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஃபோட்டோகிராபர் (2026) – முன்னோட்டம்

அஷ்ரப் அலி முகமது இயக்கி, கதாநாயகனாக நடித்து திரைக்கு வந்துள்ள சைக்காலஜிக்கல் மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படம் ‘ஃபோட்டோகிராபர்’. அடர்ந்த காடு, வெளிவராத ரகசியங்கள், மாயாஜாலம் கலந்த மாயக் கதைக் களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா? வாங்க பார்க்கலாம்.

ஃபோட்டோகிராபர் கதை

வீரா (அஷ்ரப் அலி முகமது) ஒரு திறமையான, அதே சமயம் தனித்துவமான புகைப்படக் கலைஞர். தனது திறமையை நிரூபிக்கவும், அரிதான உயிரினங்களைப் படம்பிடிக்கவும் யாருமே செல்லத் தயங்கும் ‘மதி கெட்டான் சோலை’ என்ற ஆபத்தான காட்டுப் பகுதிக்கு பயணிக்கிறார்.

அங்கு அவர் எடுக்கும் புகைப்படங்கள் மூலம் காட்டுக்குள் மறைந்திருக்கும் சில அதிர்ச்சிகரமான ரகசியங்கள் வெளிவருகின்றன. அதன்பின் வீரா திடீரென மாயமாகிவிட, அவரைத் தேடிச் செல்லும் மீட்புக் குழுவிற்குத் காத்திருக்கும் திடுக்கிடும் திருப்பங்களே ‘ஃபோட்டோகிராபர்’ படத்தின் மீதி கதை.

இயற்கையின் அழகோடு சேர்த்து, மர்மங்கள் நிறைந்த சைக்காலஜிக்கல் திரில்லர் படங்களை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு ‘ஃபோட்டோகிராபர்’ ஒரு நல்ல திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும்.

Read Also: GDN Movie Review

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡அஷ்ரப் அலி முகமதுவின் அட்டகாசமான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு மற்றும் காட்சி அமைப்பு
➡ராஜ்குமார் சந்திரசேகரனின் பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

➡மெதுவான முதல் பாதி மற்றும் பலவீனமான இரண்டாம் பாதி திருப்பங்கள்

ரேட்டிங்: ( 3 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஜிடி நாயுடு தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரை‘மக்கள் காவலன்’ – மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!