ஈவில் டெட் பேர்ன் (2026) – முன்னோட்டம்
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற திகில் திரைப்பட வரிசையான ‘ஈவில் டெட்’ (Evil Dead) தொடரின் 6-வது பாகமாக, செபாஸ்டியன் வானிசெக் (Sébastien Vaniček) இயக்கத்தில் வெளியாகியிருக்கும் “ஈவில் டெட் பேர்ன்” (Evil Dead Burn) திரைப்படத்தின் முழுமையான திரைவிமர்சனம் இதோ
ஈவில் டெட் பேர்ன் கதை

2023-இல் வெளியாகிப் பெரிய வரவேற்பைப் பெற்ற ‘ஈவில் டெட் ரைஸ்’ (Evil Dead Rise) படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சாம்பிள் ரைமி (Sam Raimi) தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. முந்தைய பாகங்களைப் போலவே இரத்தமும், கொடூரமும் நிறைந்த ஒரு அக்மார்க் ‘கொப்பளிக்கும் திகில்’ (Gore Horror) அனுபவமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆலிஸ் (Alice) என்ற இளம் பெண், தனது கணவன் ‘வில்’லின் திடீர் மரணத்திற்குப் பிறகு, அவனது குடும்பத்தினரை (In-laws) சந்திப்பதற்காக ஒரு ஒதுக்குப்புறமான ஏரிக்கரை வீட்டிற்கு (Lakehouse) வருகிறாள். கணவனின் மரணத்திற்கு ஆலிஸ் தான் காரணம் என அவளது மாமனார் எட்கர் மற்றும் மாமியார் சூசன் அவளை வெறுக்கிறார்கள்.

இறந்த கணவனின் உடலைத் தகனம் செய்யும் (Cremation) இடத்தில், எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஒரு பழமையான புத்தகத்தின் (Necronomicon) சாபத்தால் ‘டெடைட்’ (Deadite) எனப்படும் தீய ஆவி கணவனின் உடலுக்குள் புகுந்துவிடுகிறது. தகன அறையிலிருந்து எரியும் உடலோடு வெளியேறும் அந்தப் பேய், அங்கிருக்கும் மாமனார் எட்கரைக் கடிக்கிறது. ஏரிக்கரை வீட்டிற்குத் திரும்பிய பின், அந்தத் தீய சக்தி ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் எப்படி வேட்டையாடுகிறது, அதிலிருந்து ஆலிஸ் மற்றும் அவளது மைத்துனன் ஜோசப் எப்படித் தப்பிக்க முயல்கிறார்கள் என்பதே “ஈவில் டெட் பேர்ன்” படத்தின் விறுவிறுப்பான கதை.

பலவீனமான இதயம் உள்ளவர்களுக்கான படம் இதுவல்ல! ரத்தம் தெறிக்கும் கொடூரமான திகில் படங்களை விரும்பும் ‘ஈவில் டெட்’ ரசிகர்களுக்கும், ஹாலிவுட் ஹாரர் பிரியர்களுக்கும் இந்த “பேர்ன்” (Burn) தியேட்டரில் ஒரு செம வேட்டை!
Read Also: Lakshmikanthan Kolai Vazhakku Movie Review
படத்தில் சிறப்பானவை
➡மிரட்டலான இயக்கம் & மேக்கிங்
➡அனைவரின் நடிப்பு
➡அதிர்ச்சி தரும் கொடூரக் காட்சிகள்
➡பின்னணி இசை மற்றும் ஒலி வடிவமைப்பு
➡விறுவிறுப்பான க்ளைமாக்ஸ்
படத்தில் கடுப்பானவை
➡பழக்கப்பட்ட கதைக்களம்
➡பலவீனமான உணர்ச்சிக் காட்சிகள்
ரேட்டிங்: ( 3.25 / 5 )



































