லட்சுமிகாந்தன் கொலை வழக்கு (2026) – முன்னோட்டம்
இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில், வெற்றி மற்றும் ரங்கராஜ் பாண்டே நடிப்பில் 2026-இல் வெளியாகியிருக்கும் “லட்சுமிகாந்தன் கொலை வழக்கு” திரைப்படத்தின் முழுமையான திரைவிமர்சனம் இதோ
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு கதை
1940-களில் தமிழகத்தையே உலுக்கிய, தியாகராஜ பாகவதர் மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் சம்பந்தப்பட்ட நிஜமான ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. ஏனெனில், படத்தின் தலைப்பு மட்டுமே அந்த நிஜ சம்பவத்தோடு தொடர்புடையதே தவிர, ஒட்டுமொத்தத் திரக்கதையும் முற்றிலும் கற்பனையாக உருவாக்கப்பட்ட ஒரு க்ரைம் டிராமா (Fictional Crime Drama) ஆகும்.

1970-களின் பின்னணியில் கதை நகர்கிறது. நன்கு படித்த இளைஞனான அறிவுமதி (வெற்றி), அரசு வேலைக்காகப் பல ஆண்டுகள் காத்துக்கொண்டிருக்கிறான். வறுமை மற்றும் குடிகாரத் தந்தையின் சூழலால், குடும்பத்தைக் காப்பாற்றத் தனது நண்பன் மூர்த்தியுடன் (லொள்ளு சபா மாறன்) சேர்ந்து சிறுசிறு திருட்டுகளில் ஈடுபடத் தொடங்குகிறான்.
இதற்கிடையில் மல்லிகாவை (பிரிகிடா சாகா) காதலித்துத் திருமணமும் செய்துகொள்கிறான். இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான பிறகு திருட்டுத் தொழிலை விட்டுவிட நினைக்கும் அறிவுமதி, அடமானம் வைத்த நிலத்தை மீட்கச் செல்லும்போது ஒரு செல்வந்தரால் (கவிதா பாரதி) அவமானப்படுத்தப்படுகிறான். இதனால் கோபமடைந்து, இறுதித் திருட்டாக அந்தச் செல்வந்தரின் வீட்டிற்குச் செல்கிறான். அங்கு அந்த நபர் ஒரு சிறுமியிடம் காட்டும் வக்கிரமான மிருகத்தனத்தைக் கண்டு ஆத்திரமடைந்து, அவனைக் கொலை செய்கிறான் அறிவுமதி.

இந்தக் கொலையை அந்தச் சிறுமி மறைந்திருந்து பார்க்கிறாள். பல வருடங்களுக்குப் பிறகு, அதே சிறுமி வளர்ந்து நீதிபதியாக மாறும்போது, ‘வேல்முருகன்’ (மதன்குமார்) என்ற அப்பாவி ஒருவனின் கொலை வழக்கிற்கு அவள் தீர்ப்பு வழங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதன் மூலம் சட்டம், நீதி, மனிதநேயம் ஆகியவற்றிற்கு இடையே நடக்கும் விவாதமே படத்தின் மீதிக்கதை.

நிஜமான ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ வரலாற்றை எதிர்பார்க்காமல், வறுமை, சட்டம், மனிதநேயம் மற்றும் நீதி ஆகியவற்றைப் பேசும் ஒரு நல்ல எமோஷனல் க்ரைம் டிராமாவாகப் பார்த்தால், இந்தத் திரைப்படம் நிச்சயம் உங்களைக் கவரும்.
Read Also: Nagabandham Movie Review
படத்தில் சிறப்பானவை
➡வெற்றி மற்றும் ரங்கராஜ் பாண்டேவின் அட்டகாசமான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡வசனங்களும் விவாதங்களும்
➡பின்னணி இசை
➡விறுவிறுப்பான க்ளைமாக்ஸ்
படத்தில் கடுப்பானவை
➡பலவீனமான திரைக்கதை அமைப்பு
➡ஏமாற்றமளிக்கும் தலைப்பு
ரேட்டிங்: ( 2.75 / 5 )



































