ராம் அண்ட் லீலா (2026) – முன்னோட்டம்
ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில், ரியோ ராஜ் (Rio Raj), வர்திகா ஜெயின் (Vartika Jain), முனீஷ்காந்த, மாளவிகா அவினாஷ் மற்றும் சேத்தன் நடிப்பில் ஆகஸ்ட் 2026-இல் வெளியாகியுள்ள ரொமாண்டிக்-காமெடி திரைப்படம் ‘ராம் அண்ட் லீலா’.
ராம் அண்ட் லீலா கதை

30 வயதைத் தாண்டிய ராம் (ரியோ ராஜ்) பெண் கேட்டு சுமார் 50 முறை நிராகரிக்கப்பட்டவர். காதலைத் தேடி அலைந்த அவர், லோக்கல் ரயிலில் தினமும் சந்திக்கும் லீலா (வர்திகா ஜெயின்) என்ற பெண்ணைக் காதலிக்கத் தொடங்குகிறார். லீலாவும் ராமின் காதலை ஏற்கிறாள்; ஆனால் ஒரு விசித்திரமான நிபந்தனையை விதிக்கிறாள். அதாவது, மாலை 6 மணிக்கு மேல் ராமால் லீலாவைச் சந்திக்கவே முடியாது.
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு லீலாவுக்கு என்ன ஆகிறது? அந்த ரகசியத்தின் பின்னணியில் உள்ள அறிவியல்/அமானுஷ்ய உண்மை என்ன? ராம் தன் காதலியை அடைந்தாரா என்பதே நகைச்சுவை கலந்த மீதிக்கதை.

வார இறுதியில் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஜாலியாகச் சிரித்து மகிழ ஒருமுறை பார்க்கக்கூடிய லேசான ரொமாண்டிக்-காமெடி திரைப்படம்.
Read Also: One Man Movie Review
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡ரியோ ராஜ் மற்றும் வர்திகா ஜெயினின் இயல்பான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡காமெடி காட்சிகள்
➡பின்னணி இசை மற்றும் பாடல்கள்
படத்தில் கடுப்பானவை
➡தொய்வான முதல் பாதி
➡திரைக்கதை தடுமாற்றம்
ரேட்டிங்: ( 2.75 / 5 )




































