இருமுடி கட்டு (2026) – முன்னோட்டம்
சிவ நிர்வாணா இயக்கத்தில், ‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா, பிரியா பவானி சங்கர், பேபி நட்சத்திரா மற்றும் சாய் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘இருமுடி கட்டு’ (தெலுங்கில் Irumudi). ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இத்திரைப்படம், ஒரு தந்தை-மகள் பாசத்தையும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும் மையமாகக் கொண்ட ஆக்ஷன் டிராமா ஆகும்.
இருமுடி கட்டு கதை
திரிநாத் (ரவி தேஜா) ஒரு கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநராகவும் சிறு தொழில் செய்பவராகவும் வாழ்கிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவரை மனைவி காவேரி (பிரியா பவானி சங்கர்) மற்றும் ஊர் மக்கள் வெறுக்கின்றனர். ஆனால், அவருடைய சிறு வயது மகள் மணிகண்டா (பேபி நட்சத்திரா) மட்டுமே தந்தை மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார்.

மகளின் வேண்டுகோளுக்காக குடிப்பழக்கத்தை கைவிட முடிவு செய்யும் திரிநாத், 41 நாட்கள் ஐயப்ப மாலையணிந்து ‘இருமுடி’ ஏந்தி சபரிமலைக்கு செல்ல விரதம் தொடங்குகிறார். இந்த ஆன்மீக மாற்றத்திற்கு நடுவே, எதிர்பாராத ஒரு கடுமையான சமூகப் பிரச்சனை மற்றும் குற்றச் சம்பவம் அவரது குடும்பத்தை தாக்குகிறது. ஐயப்ப சாமியாக விரதத்தில் இருக்கும் திரிநாத், கோபத்தையும் நீதியையும் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

‘இருமுடி கட்டு’ திரைப்படம் வழக்கமான வணிக ரீதியான ஆக்சன் படமாக இல்லாமல், ஐயப்ப மாலையின் பின்னணியில் தந்தை-மகள் பாசத்தையும் சமூகத்தில் நடக்கும் அநீதியையும் பேசும் ஒரு அழுத்தமான எமோஷனல் டிராமாவாக உருவாகியுள்ளது. ரவி தேஜாவின் மாறுபட்ட நடிப்பிற்காகவும், வலுவான கதைக் களத்திற்காகவும் கண்டிப்பாக ஒருமுறை திரையரங்கில் பார்க்கலாம்.
Read Also: Ram And Leela Movie Review
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡ரவி தேஜா மற்றும் பேபி நட்சத்திராவின் இயல்பான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡இரண்டாம் பாதி & கிளைமாக்ஸ்
➡ஜி.வி. பிரகாஷ் குமாரின் பாடல்களும் பின்னணி இசையும்
படத்தில் கடுப்பானவை
➡மெதுவான முதல் பாதி
➡பழக்கப்பட்ட திருப்பங்கள்
ரேட்டிங்: ( 3.75 / 5 )




































