பெத்லஹேம் குடும்ப யூனிட் (2026) – முன்னோட்டம்
கிரிஷ் ஏ.டி. (Girish A.D.) இயக்கத்தில், நிவின் பாலி, மமிதா பைஜூ கூட்டணியில் வெளியாகியுள்ள ஃபீல்-குட் ரொமாண்டிக்-காட்டெடி திரைப்படம் ’பெத்லஹேம் குடும்ப யூனிட்’.
பெத்லஹேம் குடும்ப யூனிட் கதை

30-களின் நடுப்பகுதியில் இருக்கும் ஜஸ்டின் டேவிஸ் (நிவின் பாலி) தனது ஊரில் நண்பர்களுடன் சேர்ந்து கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். 20-களின் தொடக்கத்தில் இருக்கும் ஆஷ்லி (மமிதா பைஜூ) தனது குடும்பத்துடன் அதே ஊருக்குக் குடிவருகிறார்.
ஆரம்பத்தில் நிவினின் கேரக்டரைக் கண்டு ஈர்க்கப்படும் மமிதாவுக்கு, அது நாளடைவில் காதலாக மாறுகிறது. இருவருக்கும் இடையே 12-13 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருப்பதால், நிவின் இந்தக்காதலை ஏற்கத் தயங்குகிறார். இருவரின் காதலைச் சுற்றியும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே நடக்கும் கலகலப்பான சம்பவங்களை நகைச்சுவையாகக் கூறுவதே இப்படத்தின் மையக்கதை.

முழுக்க முழுக்க வன்முறை, ஆக்ஷன் திரைப்படங்களுக்கு மத்தியில் குடும்பத்தோடு திரையரங்கிற்குச் சென்று விழுந்து விழுந்து சிரித்துவிட்டு வரக்கூடிய ஒரு ஜாலியான ஃபீல்-குட் என்டர்டெய்னர்.
Read Also: 7 Star Boys Movie Review
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡நிவின் பாலி – மமிதா பைஜூ இடையே இருக்கும் காமடி மற்றும் ரொமான்ஸ் கெமிஸ்ட்ரி.
➡ஒன் லைன் காமெடி,வசனங்கள்
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡டெக்னிக்கல் தரம்
➡தமிழ் டப்பிங்
➡விஷ்ணு விஜய்யின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்குப் புத்துணர்ச்சி தருகின்றன.
படத்தில் கடுப்பானவை
➡முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் கதை பெரிதாக நகராமல், அடுத்தடுத்த காமடி பிளாக்குகளாக மட்டுமே நகர்கிறது
ரேட்டிங்: ( 3.5 / 5 )




































