பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை மற்றும் பைசன் ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது 6-வது திரைப்படத்தை இயக்கத் தொடங்கியுள்ளார். ‘மஞ்சணத்தி’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (செப்டம்பர் 7) முறைப்படி பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.
இசைஞானியுடன் முதல்முறை கூட்டணி

மாரி செல்வராஜின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘நவ்வி ஸ்டூடியோஸ்’ (Navvi Studios) வழங்கும் இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். மாரி செல்வராஜ் மற்றும் இளையராஜா கூட்டணியில் உருவாகும் முதல் திரைப்படம் என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.
நட்சத்திரப் பட்டாளம்

இப்படத்தில் கதநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகிகளாக பிரியங்கா மோகன் மற்றும் கயாடு லோஹர் நடிக்கின்றனர். இவர்களுடன் பிக்பாஸ் புகழ் பூர்ணிமா ரவி, விது உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
இன்று நடைபெற்ற துவக்க விழா பூஜையில் படக்குழுவினருடன் இசைஞானி இளையராஜா பங்கேற்று படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

































