சிக்மா தமிழ் திரைப்பட விமர்சனம்

சிக்மா (2026) – முன்னோட்டம்

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகி, சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்து அக்டோபர் 2, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் ‘சிக்மா’.

சிக்மா கதை

ரூ. 1000 கோடி மதிப்புள்ள மாஃபியா பணம் கொண்ட ஒரு ரகசிய லாக்கர் வெளிநாட்டில் உள்ளது. அந்த லாக்கரை திறக்க இரண்டு சாவிகள் தேவை. வில்லன் சம்பத்திடம் (ரெட்டி) ஒரு சாவி இருக்க, மற்றொரு சாவி கைமாறி கதாநாயகன் சந்தீப் கிஷனிடம் வந்து சேருகிறது.

தன் தந்தை வாங்கிய கடனை அடைக்கப் போராடும் சந்தீப் கிஷன், அந்தச் சாவி மற்றும் ஒரு ரகசிய பென் டிரைவை வைத்துப் பணப் பிரச்சனையைத் தீர்க்க முனைகிறார். அந்தச் சாவி அவரை எப்படி வந்தடைந்தது? வில்லன் கும்பலிடமிருந்து தப்பித்துத் தனது கடனை அடைத்தாரா? என்பதே மீதிக்கதை.

இயக்குநர் ஜேசன் சஞ்சய் பிரம்மாண்டமான மேக்கிங் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் கவனம் செலுத்தியிருந்தாலும், திரைக்கதையில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். ஒருமுறை பார்க்கக்கூடிய சாதாரண ஆக்ஷன்-ஹெய்ஸ்ட் என்டர்டெய்னர்.

Read Also: Don’t Trouble The Trouble Movie Review

படத்தில் சிறப்பானவை

➡ஜேசன் சஞ்சயின் இயக்கம் படத்திற்குப் பெரிய பலம்.
➡சந்தீப் கிஷனின் எனர்ஜியான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡உற்பத்தித் தரம்
➡இடைவேளைக் காட்சி
➡பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

➡வலுவில்லாத திரைக்கதை
➡பலவீனமான வில்லன் கதாபாத்திரம்

ரேட்டிங்: ( 3 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைடோண்ட் டிரபிள் த டிரபிள் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைபத்தா தமிழ் திரைப்பட விமர்சனம்