அன்பில் அவன் தமிழ் திரைப்பட விமர்சனம்

அன்பில் அவன் (2026) – முன்னோட்டம்

ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து அக்டோபர் 2, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள காதல்-ஆக்ஷன் திரைப்படம் ‘அன்பில் அவன்’.

அன்பில் அவன் கதை

ஹில் ஸ்டேஷனில் உள்ள ஒரு பிரம்மாண்டமான ராணி பத்மினி பங்களாவை வாங்குவது கதாநாயகி மனைவியின் நீண்ட நாள் ஆசை. தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றப் போராடி அந்த வீட்டை வாங்குகிறார் கணவர் சூர்யா (அசோக் செல்வன்).

ஆனால், அந்தப் பகுதியின் செல்வாக்குமிக்க அரசியல்வாதி / எம்.எல்.ஏ ராஜநாயகம் அந்த சொத்தை அபகரிக்கத் திட்டமிடுகிறார். எம்.எல்.ஏ அனுப்பும் ரவுடிகள் கும்பலிடமிருந்தும் ஆபத்துகளிலிருந்தும் தன் மனைவியையும், அவளது கனவு இல்லத்தையும் காப்பாற்ற சூர்யா போராடும் ‘ஹோம் இன்வேஷன்’ (Home Invasion) ஆக்ஷன் போராட்டமே ‘அன்பில் அவன்’.

காதல் மற்றும் ஆக்ஷன் கலந்து ஒரு வித்தியாசமான த்ரில்லர் படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள். அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தனின் நல்ல நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்காக ஒருமுறை பார்க்கலாம்.

Read Also: Baththa Movie Review

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡அசோக் செல்வன் & ப்ரீத்தி முகுந்தன் நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡சண்டைக் காட்சிகள்
➡தொழில்நுட்ப அம்சங்கள்
➡கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

➡திரைக்கதை தொய்வு
➡வலுவில்லாத இரண்டாம் பாதி

ரேட்டிங்: ( 2.75 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபத்தா தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைஏழு கடல் ஏழு மலை தமிழ் திரைப்பட விமர்சனம்