அவரை அழைச்சுட்டு வாங்க !! – விஜய் அழைப்பு

“அறம் செய்து பழகு” என்ற சொல்லிற்கேற்ப திரைத்துறையில் கால் பதித்த நாள் முதல் ராகவா லாரன்ஸ் பலருக்கும் குறிப்பாக மாற்று திறனாளிகளுக்கு சிறந்த முறையில் உதவி செய்து வருகின்றார். தனது படங்களில் அவர்களை மறக்காமல் பயன்படுத்தி அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொணர்வதில் அவர் சிறந்து விளங்குகிறார். இந்த கொரோனா சூழலில் தினமும் பல நூறு மக்களுக்கு அவர் வேண்டியனவற்றை செய்து வருகின்றார். 

இந்நிலையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அன்னையை பற்றி அவர் ஒரு சில விஷயங்களை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதே சமயம் தான்சேன் என்ற மாற்று திறனாளி குறித்தும் அவர் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த மாற்று திறனாளி இளைஞர் மாஸ்டர் படத்தில் இருந்து ஒரு பாடலுக்கு இசையமைத்த வீடியோவை அவர் நேற்று வெளியிட்டார். 

அதன் பிறகு தான் நடிகர் விஜயை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும், அப்போது அவர் இந்த லாக் டவுன் முடிந்தது அதை இளைஞரை அழைத்து வருமாறு அவர் கூறியதாக ராகவா தெரிவித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் அனிரூத் தனது இசையில் கட்டாயம் அவரை பயன்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். திறமைக்கு அழகும், உடலும் முக்கியம் இல்லை என்று மாற்றுத்திறனாளி இளைஞர் உடல் ஆரோகயத்துடன் வாழும் அணைத்து இளைஞர்களுக்கும் உணர்த்தியுள்ளார். 

சினிமா பற்றிய தகவல்களை உடக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் படத்துடன் இணைந்திருங்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *