எமோஜி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

எமோஜியின் கதை

கதையின் நாயகன்(மகத்) ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்கிறான் , எதார்த்தமாக(மானசா ) ஒரு பெண்ணை பார்க்கிரான், காதலிக்கிறான் சில நாட்கள் கழித்து இருவருக்கும் பிரேக் அப் ஆகிவிடுகிறது அதற்கான காரணம் அவர்களுக்குள் இருந்த ஒரு ஒப்பந்தம் தான் என்பது தெரிய வருகிறது பிறகு இந்த மனஅழுத்தத்திலிருந்து வெளியே வரமுடியாமல் நாயகன் தவிக்கிறான் அப்போது தேவிகாவை பார்க்கிரார் அவருடன் பேசும்போது மன அழுத்தத்திலிருந்து சற்று வெளியே வருவதை உணர்ந்த நாயகன் மகத் அவரிடமும் காதலை வெளிப்படுத்துகிறான் பிறகு இருவருக்கும் திருமணமும் நடக்கிறது மிகவும் சந்தோஷமாக நகர்ந்து கொண்டிருந்த திருமண வாழ்க்கைக்குள் திடீரென்று இருவரும் டைவர்ஸ் செய்ய முயற்சிக்கின்றனர், இவர்கள் டைவர்ஸ் செய்ய காரணம் என்ன என்பதும் கடைசியில் இவர்கள் டைவர்ஸ் செய்தார்களா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை…

இதனை இயக்குனர் ரங்கசாமி தற்போது உள்ள சூழலுக்கு ஏற்ற காதல் கதையை தத்ரூபமாக கூறிஉள்ளார்… மற்றும் இது 18+ கதைக்களம் என்பதும் குறிப்பிடத்தக்கது

சிறப்பானவை
கதைக்களம்
அனைவரின் நடிப்பு
பின்னணி இசை

கடுப்பானவை
மெல்ல நகரும் முதல் மூன்று எபிசோட்

Rating:( 3/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *