கோப்ரா தமிழ் திரைப்பட விமர்சனம்

கோப்ராவின் கதை

யாரும் இல்லாத அனாதையாக இருக்கும் விக்ரம் தன் பணத்தேவைக்காக KS.ரவிகுமாரிடம் அடியாளாக வேலைக்கு சேர்கிறார் , அவர் என்ன சொன்னாலும் செய்கிறார், KS.ரவிக்குமார் சிலரை கொலை செய்ய சொன்னாலும் பணத்திற்காக எதையும் யோசிக்காமல் அவர் சொல்லும் அனைவரையும் கொலை செய்கிறார், மற்றும் KS.ரவிக்குமார் இவரை படிக்கவும் வைக்கிறார், இப்படி கொலை செய்து கொண்டிருக்கும் விக்ரமிற்கு ஒரு ஆபத்து வருகிறது அந்த ஆபத்தை தனது கணித திறமையால் எப்படி சரி செய்கிறார் என்பதும் இதற்கிடையில் நாயகி ஸ்ரீநிதி விக்ரமை காதலிக்கிறார் இவரது காதல் திருமணத்தில் முடிந்ததா ? இல்லையா ? என்பதும் மீதி கதையாக உள்ளது…

மற்றும் இந்த கதையில் இர்பான் பதான் , மிர்னாலினி ரவி , மற்றும் மீனாட்சி கோவிந்தராஜ் இவர்கள் அனைவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், இந்த கதையை இயக்குனர் அஜய் ஞானமுத்து மிக அழகாகவும் அவரது பாணியில் சற்று விறுவிறுப்பாகவும் கொண்டுசென்றுள்ளார்

படத்தில் சிறப்பானவை
சீயான் விக்ரமின் நடிப்பு
AR ரஹ்மானின்இசை
திரைக்கதை
கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
விறுவிறுப்பான முதல் பாதி

படத்தில் கடுப்பானவை
படத்தின் நீளம்
மெல்ல நகரும் இரண்டாம் பாதி கதைக்களம்

Rating: (3.25/5)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *