அயலி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

அயலி கதை

1990 -ல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அயலி என்ற தெய்வம் இருக்கிறது. அந்த கிராமத்தில் ஒருசில வழிபாடுகள் உள்ளன. அது என்னவென்றால் பெண்கள் வயதுக்கு வந்த உடனேயே திருமணம் செய்துவைக்க வேண்டும்.

தமிழ்செல்வி என்ற பெண்ணுக்கு படித்து டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, ஆனால் ஊர் கட்டுப்பாட்டை மீற முடியாது. அதனால் தமிழ் செல்வி தான் வயதுக்கு வந்த விஷயத்தை மறைத்துவிட்டு படிக்க ஆரம்பிக்கிறார், ஆனால் இதற்கிடையில் இவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது. அதனை தனது அம்மாவின் உதவியுடன் எப்படி சமாளிக்கிறார் என்பதும், இவை அனைத்தையும் தாண்டி தமிழ் செல்வி டாக்டர் ஆனாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

இதனை இயக்குனர் முத்துக்குமார் மிக சிறப்பாக இயக்கியதோடு ஒரு நல்ல கருத்தையும் கொடுத்துள்ளார்.

8 எபிசோடுகளை கொண்ட இந்த அயலி ZEE 5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
கதாப்பாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு
பிண்ணனி இசை
வசனம்

படத்தில் கடுப்பானவை
கடுப்பாகும் அளவிற்கு எதுவுமே இல்லை

Rating: ( 4/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *