முதல்வர் மகாத்மா தமிழ் திரைப்பட விமர்சனம்

முதல்வர் மகாத்மா-வின் கதை

கதையின் ஆரம்பத்திலேயே மகாத்மாகாந்தி அவர்களை ஜனவரி 30 -1948 அன்று கொன்று விடுகின்றனர், இறந்த காந்தி அவர்கள் கடவுளிடம் தான் மீண்டும் பூமிக்கு செல்ல விரும்புவதாக சொல்கிறார், ஆனால் கடவுளோ அதனை மறுக்கிறார். பிறகு காந்தி அவர்கள் தனது தொடர் தியானத்தினால் கடவுளிடம் வரம் பெற்று மீண்டும் பூமிக்கு மோகன் தாஸ் என்ற இவரின் இயற்பெயரிலேயே வயதான தோற்றத்துடன் வருகிறார்.

பூமியில் அவதரித்த மோகன்தாஸ் ஒரு கிராமத்தில் வாழ்கிறார், அங்கு இருக்கும் சிறு சிறு பிரச்சனைகளை இவரின் போராட்டத்தினாலும் , புத்திசாலித்தனத்தினாலும் தீர்த்துவைக்கிறார். பிறகு இங்கு பூமியில் நடக்கும் பல விஷயங்களை பார்த்து அதிர்ச்சி அடைகிறார், மற்றும் அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்களை கண்டு வேதனை அடைகிறார் , இதுமட்டுமல்லாமல் சில கார்ப்பரேட் கம்பெனியால் நாடு அழிவை நோக்கி செல்வதை கண்டு மிகவும் வேதனை அடைகிறார். இவை அனைத்தையும் பார்த்து வேதனை அடைந்த மோகன்தாஸ் அதற்கு எதிராக என்ன செய்கிறார் என்பதே படத்தின் மீதி கதை.

இந்த கதை மகாத்மா காந்தியின் சரித்திம் ஆகும் , மற்றும் இந்த சரித்திம் ஸ்ரீ ரமணா ஸ்டுடியோஸ் என்ற யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

இந்த கதையை இயக்குனர் A.பாலகிருஷ்னன் இயக்கியுள்ளார்.
இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைமைக்கேல் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைபொம்மை நாயகி தமிழ் திரைப்பட விமர்சனம்