கழுவேத்தி மூர்க்கன் தமிழ் திரைப்பட விமர்சனம்

கழுவேத்தி மூர்க்கன் கதை

கழுவேத்தி என்பது அந்த காலத்தில் சில தவறுகள் செய்பவர்களுக்கு கொடுக்கப்படும் அதிகபட்ச தண்டனையாகும், அந்த தண்டனை ஒரு கூம்பு போன்ற மரத்தில் மனிதனை உட்கார வைப்பதாகும், அதன் பிறகு அவர்கள் ரத்தம் வடிந்து, வலியில் துடிதுடித்து இறப்பார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தெக்குப்பட்டி கிராமத்தில், மேல் ஜாதியினர் வசிக்கும் இடம் மேல தெருவாகவும், கீழ் ஜாதியினர் வசிக்கும் இடம் கீழத்தெருவாகவும் இருக்கிறது, கதையின் நாயகன் மூர்க்கன் மேலத்தெருவை சேர்ந்தவர் அவரின் மிக நெருங்கிய நண்பர் பூமி கீழத்தெருவை சேர்ந்தவர், இவர்களின் நட்பு பலருக்கும் பிடிக்காது.

ஒரு கட்சியினர் அவர்களின் கட்சி மாநாட்டை தெக்குப்பட்டியில் நடத்த முடிவெடுக்கின்றனர், அதற்கான போஸ்டரை கீழத்தெருவில் ஓட்ட வரும்போது , பூமிக்கும் கட்சியினருக்கும் தகராறு ஏற்படுகிறது , அதனால் பல திருப்பங்கள் நடக்கிறது , இந்த சம்பத்தை வைத்து அந்த அரசியல்வாதி செய்யும் அரசியலும் , அதற்கு கதையின் நாயகன் கழுவேத்தி மூர்க்கன் என்ன செய்கிறார் என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் சை.கௌதம ராஜ் மிக சிறப்பாகவும் , நல்ல கருத்துள்ள படமாகும் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

கதைக்களம்
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
கழுவேத்தி மூர்க்கனாக வாழ்ந்த அருள்நிதி
அருள்நிதி & துஷாரா விஜயன் காதல் காட்சிகள்
ஸ்ரீதரின் ஒளிப்பதிவு
D . இமானின் பின்னணி இசை
வசனம்

படத்தில் கடுப்பானவை

படத்தின் வேகத்தை குறைக்கும் ஒருசில காட்சிகள்

Rating : ( 3.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *