”மம்முட்டியுடன் நடிப்பது மாபெரும் பாக்கியம்” ஐஸ்வர்யா மேனன்

கடந்த மாதம் ரிலீஸான தெலுங்கு மற்றும் பான் இண்டியா படமான ‘ஸ்பை’ சூப்பர் ஹிட் அடித்த வகையில் ஆந்திராவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகியிருக்கும் ஐஸ்வர்யா மேனன், கார்த்திகேயா, ‘ஸ்பை’ நாயகன் நிகில் சித்தார்த்தா உட்பட தெலுங்கின் முன்னணி ஹீரோக்களுடன் அடுத்தடுத்து பிசியாக வலம் வருகிறார்.

இந்நிலையில் மாபெரும் ஜாக்பாட்டாக மம்முட்டி படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவரது காம்பினேஷனில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன். இதுகுறித்துப் பேசிய அவர், “நான் மம்முட்டியின் தீவிர ரசிகை. அவர் படத்தில் ஒரே ஒரு காட்சியிலாவது நடித்துவிட மாட்டோமா என்று கனவு கண்டு காத்திருந்திருக்கிறேன். தற்போது அந்தக் கனவு ‘பஸூகா’ படத்தின் மூலம் நனவாகி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவருடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறேன். இப்படத்தின் இளம் நாயகனுக்கு ஜோடியாக மிக முக்கியமான, கதைக்கு திருப்பம் தரும் ஒரு கேரக்டரில் நடிக்கிறேன். அறிமுக இயக்குநர் டீனோ டென்னிஸ் இயக்கும் இப்படத்தை தியேட்டர் ஆஃப் ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மம்முட்டி எத்தனை தேசிய விருதுகள், கேரள அரசின் மாநில விருதுகள் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் மனதை வென்ற மனிதர்…ஆனால் படப்பிடிப்பில் மிக எளிமையாக பாசமாக, அவர் பழகும் விதம் நெகிழச் செய்கிறது.அவருடன் இணைந்து நடிப்பது வாழ்வின் மறக்க முடியாத அம்சமாக மாறியிருக்கிறது. இப்படம் கமிட் ஆன பிறகு வரிசையாக அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர்ந்து அழைப்பு வருகிறது” என்று உற்சாகமாகப் பேசுகிறார் ஐஸ்வர்யா மேனன்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபிரமாண்ட பான் இந்திய திரைப்படம் மட்கா #VT14 பூஜையுடன் இனிதே துவங்கியது
அடுத்த கட்டுரைவெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் படம் ‘லக்கி பாஸ்கர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது!