பிரமாண்ட பான் இந்திய திரைப்படம் மட்கா #VT14 பூஜையுடன் இனிதே துவங்கியது

பலாசா திரைப்பட புகழ் கருணா குமார் இயக்கவுள்ள, மெகா பிரின்ஸ் வருண் தேஜின் 14வது படத்தை, வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரின் கீழ், மிகப்பெரும் பட்ஜெட்டில், மோகன் செருக்குறி (CVM) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா ஆகியோர் தயாரிக்கின்றனர். வருண் தேஜ் திரை வரலாற்றில் மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் இந்த #VT14 பிரமாண்ட திரைப்படம் இன்று ஹைதராபாத்தில் படக்குழுவினர் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது.

இவ்விழாவினில் சுரேஷ் பாபு மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் ஸ்கிரிப்டை இயக்குநரிடம் ஒப்படைத்து பணிகளை தொடங்கினார்கள். மெகா தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கிளாப் போர்டு அடிக்க, இயக்குநர் மாருதி கேமரா ஸ்விட்ச் ஆன் செய்து, முதல் ஷாட்டின் படப்பிடிப்பை துவக்கினார். இந்த முதல் ஷாட்டை தில் ராஜு அவர்கள் இயக்கினார். . டைட்டில் போஸ்டரை ஹரிஷ் ஷங்கர் வெளியிட்டார்.

#VT14 க்கு மட்கா என சுவாரஸ்யமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது மற்றும் டைட்டில் போஸ்டர் தனித்துவமாகவும் வெகு சுவாரசியமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மட்கா என்பது சூதாட்டத்தின் ஒரு வடிவம். 1958-1982 ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில், முழு தேசத்தையும் உலுக்கிய உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, வைசாக் நகரின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. 24 வருடங்களில் நடக்கும் கதையாக அமைக்கப்பட்டுள்ள திரைக்கதையில், 1958ல் இருந்து 82 ஆம் ஆண்டு காலகட்டம் வரை வருண் தேஜை நான்கு விதமான கெட்-அப்களில் இப்படத்தில் தோன்றவுள்ளார். வருண் தேஜ் திரைவாழ்வின் பிரமாண்ட படமாக உருவாகும் இப்படத்திற்காக முழுமையாக தன்னை மாற்றிக்கொண்டு நடிக்கவுள்ளார்.

60களில் வைசாக் நகரை சித்தரிக்கும் பிரமாண்டமான விண்டேஜ் செட் படத்திற்காக அமைக்கப்படவுள்ளது. 60களின் சூழலையும் உணர்வையும் திரையில் கொண்டுவர படக்குழு கூடுதல் அக்கறையுடன் உழைப்பை கொட்டி வருகிறது. ஆஷிஷ் தேஜா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சுரேஷ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள்.

படத்திற்காக அற்புதமான தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவை தயாரிப்பாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். தென்னிந்திய சினிமாவின் பரபரப்பான இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்க, ப்ரியாசேத் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் எடிட்டராக பணியாற்றுகிறார்.

மட்கா உலகளாவிய ரசிகர்களை ஈர்க்கும் அம்சங்களை கொண்டுள்ளது, எனவே இது பான் இந்தியா அளவில் பிரமாண்ட படைப்பாக உருவாக்கப்படவுள்ளது. . இது உண்மையில் வருண் தேஜுன் முதல் பான் இந்தியா திரைப்படமாகும், மேலும் இது தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.

நடிகர்கள்: வருண் தேஜ், நேரா ஃபதேஹி, மீனாட்சி சௌத்ரி, நவீன் சந்திரா, கன்னட கிஷோர், அஜய் கோஷ், மைம் கோபி, ரூபாலட்சுமி, விஜய்ராம ராஜு, ஜெகதீஷ், ராஜ் திரந்தாஸ்

தொழில்நுட்பக் குழு:
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கருணா குமார்
தயாரிப்பாளர்கள்: மோகன் செருகுரி (CVM) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா
பேனர்: வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் இசை: ஜீ.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : பிரியசேத்
எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீனிவாஸ் R
தயாரிப்பு வடிவமைப்பு: ஆஷிஷ் தேஜா
கலை: சுரேஷ்
நிர்வாகத் தயாரிப்பாளர் – RK.ஜனா
மக்கள் தொடர்பு : யுவராஜ்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here