லேபில் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

லேபில் கதை

கதையின் நாயகன் பிரபாகரன், சிறுவயதில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக்கொண்டிருக்கிறான். அப்போது அவனுடன் விளையாடிக்கொண்டிருந்த 4 பேர், ஒரு போலீசை கொலை செய்துவிடுகின்றனர். அதனை பார்த்து, பயந்த பிரபாகரன் அங்கிருந்து செல்லும் சமயத்தில் போலிஸ் இவனையும் இந்த கூட்டத்துடன் சேர்த்து பிடித்துவிடுகின்றனர்.

நீதிமன்றத்தில் விசாரணையின் போது பிரபாகரன் தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறுகிறான். ஆனால் நீதிபதி இவன் வாலி நகர் என்பதால், அந்த நகரத்தின் மேல் உள்ள தவறான கண்ணோட்டத்தில் இவன் கூறுவதை ஏற்க மறுக்கிறார். அப்போது பிரபாகரன் வாலி நகர் மேல் இருக்கும் இந்த தவறான கண்ணோட்டத்தை மற்ற நினைக்கிறான், பிறகு அதற்காக பிரபாகரன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதே மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

இந்த வெப் சீரிஸ் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

சிறப்பானவை

➡கதைக்கரு
➡வசனங்கள்
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த ஜெய் & மகேந்திரன்
➡ஒளிப்பதிவு
➡சாம் CS பின்னணி இசை

கடுப்பானவை

➡வேகத்தை குறைக்கும் காதல் காட்சிகள்

Rating: ( 3.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபிரைம் வீடியோ அடுத்த வெளியீடாக, தி வில்லேஜ் நவம்பர் 24 அன்று வெளியாகிறது
அடுத்த கட்டுரைஜிகர்தண்டா டபுள்X தமிழ் திரைப்பட விமர்சனம்