ஆர்யமாலா கதை
இந்த ஆர்யமாலா திரைப்படம் 1982 ல் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும்.
கடலூரில் உள்ள மருதூர் என்கிற கிராமத்தில், கதையின் நாயகி மலர் மற்றும் அவரின் தங்கை கயல் இருவரும் சந்தோசமாக இருக்கிறார்கள்.
மலருக்கு 16 வயது ஆகிறது, ஆனால் அக்கா மலருக்கு முன் தங்கை கயல் வயதுக்கு வந்துவிடுகிறார். இதனால் ஊரில் சிலர் மலரை தவறாக பேசுகிறார்கள்.
Read Also: Sir Tamil Movie Review
மலரின் இந்த பிரச்னைக்கு நாட்டு வைத்தியம் பார்க்கிறார்கள், அப்போது மலருக்கு ஒரு கனவு வருகிறது. அதில் மலர் வயதுக்கு வந்துவிட்டது போலவும், அவருக்கு பிடித்த ஒருவரையும் கனவில் காண்கிறாள். அப்போது ஊர் திருவிழாவுக்காக தெருக்கூத்து போட ஆட்கள் வருகிறார்கள் அதில் சரவணன் என்பவர் மலரின் கனவில் வந்தவர் போல் இருக்கிறார், இதற்கடுத்து இவர்களுக்குள் என்னானது என்பதும், மலர் வயதுக்கு வந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை ஜேம்ஸ் யுவன் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡️கதைக்கரு
➡️கதையின் நாயகன்& நாயகியின் நடிப்பு
➡️மற்ற அனைவரின் நடிப்பு
➡️பின்னணி இசை
➡️ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
➡️மெல்ல நகரும் இரண்டாம் பாதி கதைக்களம்