ஆயிரம் பொற்காசுகள் கதை
குருவாரிப்பட்டி என்ற கிராமத்தில் வசிக்கும் சரவணன், எந்த ஒரு வேலைக்கும் போகாமல் அரசு கொடுக்கும் இலவச பொருட்களிலும், சலுகையிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். பக்கத்து வீட்டு கோழியை அடித்து சாப்பிடுவது போன்ற செயல்களையும் செய்துகொண்டிருக்கிறார். ஒருநாள் ஊரிலிருந்து வரும் அவரின் அக்கா விதார்த்தை, சரவணனிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிடுகிறார். விதார்த்தை பயமுறுத்தி அடக்க நினைக்கிறார் சரவணன் ஆனால் ஒருகட்டத்திற்கு மேல் இருவரும் ஒன்றாக சுற்ற ஆரம்பிக்கின்றனர். மற்றும் விதார்த் அங்கு ஒரு பெண்ணை காதலிக்கவும் செய்கிறார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் கழிவறை கட்ட அரசாங்கம் 12 ஆயிரம் ரூபாய் அளிக்கிறது. சரவணன் வேறொருவர் கட்டிய கழிவறையில் புகைப்படம் எடுத்து, 12 ஆயிரம் ரூபாய் வாங்கி செலவழிகிறார். இதனால் பாதிக்கப்பட்டவர் ஊர் தலைவரிடம் முறையிடுகிறார். ஊர் தலைவரோ, சரவணனிடம் நீ ஒரு கழிவறை கட்டி அதில் வரும் 12 ஆயிரம் ரூபாய் பணத்தை பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்க சொல்கிறார். சரவணனும், விதார்த்தும் கழிவறை கட்ட பள்ளம் எடுக்கின்றனர், ஒருகட்டத்திற்கு மேல் பள்ளம் எடுக்க முடியாததால் ஆள் வைத்து தோண்டுகின்றனர், அப்போது அவர்களுக்கு பொற்காசுகள் கிடைக்கிறது. அந்த பொற்காசுகளை சரவணன், விதார்த், பள்ளம் தோண்ட வந்தவர் மூன்று பேரும் சேர்ந்து, மறுநாள் மூன்று பங்காக போட முடிவெடுக்கின்றனர். கடைசியில் இவர்கள் திட்டமிட்டபடி மூன்று பங்காக பிரித்தார்களா? இல்லையா? என்பதும் அந்த பொற்காசுக்காக என்னவெல்லாம் நடந்தது என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ரவி முருகையா இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்களம்
➡திரைக்கதை
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
➡பாடல்கள்
Rating: ( 3.5/5 )


























