குட் நைட் தமிழ் திரைப்பட விமர்சனம்

குட் நைட் கதை

தனது குடும்பமான அம்மா , அக்கா, மாமா,தங்கை என ஒரு நடுத்தரகுடும்பத்தில் மிக சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்தான் கதையின் நாயகன் மோகன் ( மணிகண்டன் ). IT -யில் வேலை செய்யும் இவருக்கு அங்கேயே ஒரு காதலி இருக்கிறார் , இவருக்கு இருக்கும் குறட்டை பிரச்சனையால் அந்த காதலும் பிரிந்துவிடுகிறது.

எதார்த்தமாக கதையின் நாயகி அணுவை சந்திக்கும் மோகன் காதலிக்கிறார் , பிறகு இருவரும் திருமணமும் செய்து சொல்கின்றனர் , திருமணத்திற்கு பிறகு தான் அனுவிற்கு குறட்டை பிரச்சனை தெரிகிறது , இந்த குறட்டை பிரச்சனையை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என முயற்சிக்கிறார் மோகன் , இதற்கிடையில் இவர்களுக்குள் வரும் சின்ன சின்ன சண்டைகள் அனைத்தும் பெரிதாகிக்கொண்டே இருக்கிறது . கடைசியில் மோகனுக்கு இருக்கும் குறட்டை பிச்சனை சரி ஆனதா? மற்றும் இவர்களுக்குள் இருந்த சண்டை சமாதானத்தில் முடிந்து இருவரும் இணைந்தார்களா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் மிக சிறப்பாக ஒரு நல்ல காமெடி திரைப்படத்தை கொடுத்துள்ளார்.

படத்தில் சிறப்பானவை

கதைக்களம்
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
சிறப்பான காமெடிகள்
விநாயக் சந்திரசேகரின் இயக்கம்
பாடல்கள் & பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

கடுப்பாகும் அளவிற்க்கு எதுவும் இல்லை

Rating : ( 4/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *