இராவண கோட்டம் தமிழ் திரைப்பட விமர்சனம்

இராவண கோட்டம் கதை

ராமநாதபுரம் மாவட்டம், ஏனாதி என்கிற கிராமத்தில் , மேலத்தெருவை சேர்ந்த போஸ் என்பவரும் , கீழத்தெருவை சேர்ந்த சித்ரவேல் என்பவரும் இணைந்து அந்த ஊரை அமைதியாக வழி நடத்திக்கொண்டு வருகின்றனர்.

கீழத்தெருவை சேர்ந்த மாரி என்பவர இவர்களுக்குள் இருக்கும் நட்பை களைத்து கலவரத்தை உண்டாக்க, அந்த ஊர் அரசியல்வாதிகளுடன் இணைந்து நிறைய வேலைகளை செய்கிறார், மற்றும் இந்த ஊரில் உள்ள சீமை கருவேல மரத்தை பற்றியும் சில விஷயங்கள் சொல்லப்படுகின்றன. கடைசியில் மாரி நினைத்தபடி இவர்களுக்குள் சண்டை வந்து இரு தரப்பினரும் பிரிந்தார்களா ? இல்லையா ? என்பதே மீதி கதை…

இந்த கதையினை மதயானை கூட்டம் படத்தை இயக்கிய, இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

சாந்தனுவின் அட்டகாசமான நடிப்பு
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை
ஒளிப்பதிவு
அரசியல் பேசும் சில வசனங்கள்

படத்தில் கடுப்பானவை

காலகாலமாக கண்ட அதே கதைக்களம்
சுற்றி வளைக்கும் திரைக்கதை

Rating : ( 2.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *