ரசிகர்களை கவர்ந்த “ஏஜென்ட்” டீசர்

அகில் அக்கினேனி, சுரேந்தர் ரெட்டி, இணையும், ஏகே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பான் இந்திய திரைப்படமான ‘ஏஜென்ட்’ படத்தின் மாஸ், ஸ்டைலிஷ் மற்றும் அதிரடி டீசர் வெளியிடப்பட்டது.

திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களான நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் கிச்சா சுதீப் ஆகியோர் இணைந்து இவ்வாண்டின் மிக முக்கியமான திரைப்படமான ஏஜென்ட் படத்தின் தமிழ் மற்றும் கன்னட மொழி டீசரை வெளியிட்டனர். அதே நேரத்தில் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முறையே அகில் மற்றும் மம்முட்டி இதன் டீசரை வெளியிட்டனர். இந்தி பதிப்பு டீசரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மகாதேவாக நடித்துள்ள நடிகர் மம்முட்டி அவர்களின் பார்வையில் இந்த டீசர் காட்டப்பட்டுள்ளது. ஒரு விசாரணைக்கு அழைக்கப்பட்ட அவர், ‘ஏஜென்டின்’ தைரியம், வீரம் மற்றும் கணிக்க முடியாத தன்மையை பற்றி கூறுகிறார். அவன் மிகவும் தைரியமான, தீவிரமான தேசபக்தன். அவனைப் பிடிப்பது என்பது சாத்தியமில்லை என்று கூறுகிறார். அவரது மரண அஞ்சலி ஏற்கனவே எழுதப்பட்டதாக அவர் கூறுகிறார்.

காதலி அவனை, ‘வைல்ட் சாலே’ காட்டுப்புலி என்று அழைக்கிறாள். ‘ஏஜென்ட்’ பற்றிய ஒவ்வொரு வார்த்தையும் அகிலின் தைரியமிகுந்த வீரமிக்க செயல்களால் விவிரிக்கப்படுகிறது. அவன் உண்மையில் மரணத்திற்கு பயப்படாத அஞ்சா நெஞ்சன். இறுதியில் வீரமிக்க அவனின் கூச்சல் உயிர் நடுங்க செய்கிறது.

ஆக்‌ஷன் நிரம்பிய கதாபாத்திரத்தில் தன்னை பொருத்திகொண்டு, அதை ஸ்டைலாக எடுத்துச் செல்லும் அகில், அவரது அற்புதமான திறமையால் நம்மை வியக்க வைக்கிறார். அவரது உருமாற்றம் உண்மையிலேயே நம்மை ஆச்சரியப்படுத்துகிறது, அதிலும் அவரது முதுகில் உள்ள டாட்டூ, அவருக்கு மேலும் ஸ்டைலை கூட்டுகிறது. ஒரே காட்சியில் தோன்றும் நடிகை சாக்‌ஷி வைத்யா மிக அழகாக இதயத்தை கொள்ளை கொள்கிறார். வழக்கம்போல் மம்முட்டி தனது வழக்கமான பாணியில் நடிப்பு திறமையால் அசத்துகிறார்.

தயாரிப்பாளர் சுரேந்தர் ரெட்டி பிரமாண்டமான வகையில் அசத்தலாக காட்சிப்படுத்தியது டீசரில் தெரிகிறது. ரசூல் எல்லோர் ஏஜெண்ட் படத்தின் உலகத்தை கண் முன் காட்டி பிரமிக்க வைக்கிறார், ஹிப் ஹாப் தமிழாவின் பின்னணி இசை நம்மை வசியப்படுத்துகிறது, அதோடு அகிலின் கதாபாத்திரத்தையும் நம் மனதில் வரைந்து செல்கிறது. ஏகே என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் சுரேந்தர் 2 சினிமா இணைந்து ஏஜென்ட் படத்தின் பிரமாண்ட உலகை வடிவமைத்துள்ளனர்.

இப்படத்திற்கு கதை வசனத்தை வக்கந்தம் வம்சி வழங்கியுள்ளார். ஏ.கே. எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் சுரேந்தர் 2 சினிமாவின் சார்பில் ராமபிரம்மம் சுங்கரா தயாரித்துள்ளார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பாளராகவும், அவினாஷ் கொல்லா கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள்.

நடிகர்கள்: அகில் அக்கினேனி, சாக்‌ஷி வைத்யா, மம்முட்டி
இயக்குநர்: சுரேந்தர் ரெட்டி
தயாரிப்பாளர்: ராமபிரம்மம் சுங்கரா
இணை தயாரிப்பாளர்கள்: அஜய் சுங்கரா, பதி தீபா ரெட்டி
நிர்வாக தயாரிப்பாளர்: கிஷோர் கரிகிபதி
தயாரிப்பு நிறுவனங்கள்: ஏகே எண்டர்டெயின்மெண்ட்ஸ், சுரேந்தர் 2 சினிமா
கதை: வக்கந்தம் வம்சி
இசையமைப்பாளர்: ஹிப் ஹாப் தமிழா
ஒளிப்பதிவு: ரசூல் எல்லோர்
எடிட்டர்: நவீன் நூலி
கலை இயக்குனர்: அவினாஷ் கொல்லா
மக்கள் தொடர்பு: சதீஷ் குமார் (AIM)

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here